News February 8, 2026
கோவை: இனி Whats app மூலம் வரி செலுத்தலாம்

தமிழக அரசு, மெட்டா நிறுவனத்துடன் இணைந்து Whatsapp மூலமாக பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பெறுதல், வரி மற்றும் மின் கட்டணம் செலுத்துதல் என 50-க்கும் மேற்பட்ட சேவைகள் பெரும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அத்தனை அரசு சேவைகளையும் அலைச்சல் இல்லாமல் நீங்கள் வீட்டில் இருந்தே பெறலாம். (SHARE)
Similar News
News February 19, 2026
கோவை மாவட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000!

கோவை மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <
News February 19, 2026
கோவையில் ரயில் மோதி ஒருவர் உயிரிழப்பு

கோவை – பீளமேடு ரயில்வே தண்டவாள பகுதியில் நேற்று சுமார் 35 வயது மதிக்கத்தக்க நபர் ரயில் மோதி உயிரிழந்தார். கருப்பு நிற பனியன் மற்றும் காவி நிற வேட்டி அணிந்திருந்த அவரிடம் அடையாள ஆவணங்கள் ஏதும் இல்லாததால், அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இது குறித்து தகவலறிந்த ரயில்வே போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 19, 2026
“காந்திபுரம்” – மயில்சாமி அண்ணாதுரை நெகிழ்ச்சி!

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, நான் இந்த காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து தான் பெங்களூர் சென்றேன். தற்போது இதே காந்திபுரம் பேருந்து நிலையத்தில் சந்திரயான் மாதிரியை திறந்து வைத்துள்ளேன். பெருமையாக உள்ளது. கோவையில் இருந்தும் சந்திரயானுக்கு உபகரணங்கள் எடுத்துச் செல்லப்பட்டது எனக்கு தெரியும். அறிவியலில் கோவை மாவட்டம் நல்லிடத்தில் உள்ளது” என்றார்.


