News February 8, 2026
FLASH: சிக்கன் விலை பெரிய அளவில் குறைந்தது

பறவைக் காய்ச்சல் அச்சம் காரணமாக சிக்கன் விற்பனை சற்று சரிந்துள்ளதாக இறைச்சி கடை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, சிக்கன் விலையும் கணிசமாக குறைந்துள்ளது. அந்த வகையில் நாமக்கல் மொத்த சந்தையில் 1 கிலோ சிக்கன் ₹115 ஆக குறைந்துள்ளது. முட்டை ₹5.25-க்கு விற்பனையாகிறது. சென்னை, மதுரை, வேலூர் உள்ளிட்ட நகரங்களில் ஒரு கிலோ சிக்கன் ₹160 – ₹180 வரை குறைந்துள்ளது. உங்கள் ஊரில் 1 கிலோ சிக்கன் எவ்வளவு?
Similar News
News February 15, 2026
சற்றுமுன்: தமிழக தேர்தல் தேதி.. புதிய தகவல் கசிந்தது

TN-ல் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்.11-ம் தேதி நடைபெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக தனியார் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், நேற்று பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தேசிய அமைப்புச் செயலாளர் BL சந்தோஷ் இதனைத் தெரிவித்ததாகவும், தேர்தலுக்கான அறிவிப்பு மார்ச் 8 – 12-ம் தேதிக்குள் வெளியாக வாய்ப்புள்ளதாக அவர் கூறியதாகவும் தெரிவித்துள்ளது. இதனால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
News February 15, 2026
3,979 பணியிடங்கள்.. உடனே APPLY பண்ணுங்க

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான யந்திரா இந்தியா லிமிடெட்டில் 3,979 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஐடிஐ பிரிவு பணிக்கு மாதம் ₹8,200, ஐடிஐ அல்லாத பிரிவுகளுக்கு ₹9,600 சம்பளமாக வழங்கப்படும். இப்பணிக்கு பத்தாம் வகுப்பு கல்வித்தகுதி போதுமானது. சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். விருப்பமுள்ளவர்கள் மார்ச் 3-க்குள் இந்த <
News February 15, 2026
BREAKING: சசிகலா புதிய கட்சி

ஜெயலலிதா பிறந்த நாளான வரும் பிப்.24-ம் தேதி பசும்பொன்னில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்த சசிகலா முடிவு செய்துள்ளார். அப்போது தனிக்கட்சியை தொடங்கவுள்ள அவர், கட்சி பெயரையும், கொடியையும் அன்றே அறிவிக்கவுள்ளார். அன்றைய தினம் அதிமுக & அமமுகவின் முக்கிய நிர்வாகிகளும் சசிகலா கட்சியில் இணையலாம் எனவும், தவெகவுடன் கூட்டணி அமைக்கும் முடிவிலும் அவர் உள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.


