News February 8, 2026
₹25,000 வரை இழப்பீடு:RBI

டிஜிட்டல் பணப்பரிமாற்றம் அதிகரிக்கும் அதேநேரத்தில், டிஜிட்டல் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் டிஜிட்டல் மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த கேள்வியும் கேட்காமல் ₹25,000 வரை இழப்பீடு வழங்கப்படும் என RBI அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட நபர்கள் இதனை வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே பெற முடியும். பாதிக்கப்பட்டவர்களே மோசடி நபர்களுக்கு OTP அனுப்பி பணத்தை இழந்திருந்தாலும் இழப்பீடு வழங்கப்படும்.
Similar News
News February 17, 2026
தொகுதிப் பங்கீடு: ஸ்டாலின் தீவிர ஆலோசனை

சென்னையில் தேர்தல் தொகுதிப் பங்கீடு குழு அமைப்பது குறித்து மு.க.ஸ்டாலின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து வருகிறார். அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, கனிமொழி உள்ளிட்டோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதில், காங்., விசிக, IUML, கம்யூ., உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை சீட் மற்றும் எந்தெந்த தொகுதிகளை ஒதுக்கீடு செய்யலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
News February 17, 2026
2026-க்கு பின் திமுக வனவாசம் செல்லும்: தமிழிசை

பகுத்தறிவாளர்கள் என கூறிக்கொண்டு, அமாவாசை அன்று நல்ல நேரம் பார்த்து பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதாக தமிழிசை விமர்சித்துள்ளார். ஏமாற்றப்பட்ட மக்களோ, இது திமுகவின் இறுதி பட்ஜெட் எனக் கூறுவதாக சாடினார். மேலும், MGR இருந்தவரை 14 ஆண்டுகளுக்கு மேல் பதவியில் அமர முடியாத வனவாச நிலை கருணாநிதிக்கு ஏற்பட்டதாகவும், 2026-க்கு பின்னர் அதை விட நீண்ட தோல்வி திமுகவுக்கு காத்திருக்கிறது எனவும் தெரிவித்தார்.
News February 17, 2026
T20 WC: சூப்பர் 8-ல் இந்தியா மோதும் அணிகள்!

2026 T20 WC-ல் சூப்பர்-8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுள்ளன. சூப்பர் 8-ல் குரூப் பிரிவில் உள்ள இந்திய அணி, பிப்.22-ல் தென்னாப்பிரிக்காவையும், பிப்.26-ல் ஜிம்பாப்வேயையும், மார்ச் 1-ல் வெஸ்ட் இண்டீஸையும் எதிர்கொள்ள உள்ளது. இந்தியாவுக்கு எதிராக விளையாட உள்ள 3 அணிகளும் வலுவான நிலையில் உள்ளதால், இந்தியாவுக்கு பெரும் சவால் காத்திருக்கிறது.


