News May 9, 2024
ரத்தினகிரி கொள்ளை வழக்கு இரண்டு பேர் மீது குண்டாஸ்

ராணிப்பேட்டை, ரத்தினகிரியில் ஓய்வு பெற்ற போக்குவரத்து உதவி பொறியாளர் வீட்டில் 2 மாதத்திற்கு முன்பு 75 சவரன் நகைகள் திருடு போனது. இந்த வழக்கில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்த கண்ணதாசன், ஐயப்பன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் 2 பேரையும் குண்டர்சட்டத்தில் கைது செய்ய எஸ் பி கிரண் ஸ்ருதி பரிந்துரையில் ஆட்சியர் வளர்மதி உத்தரவிட்டார்.
Similar News
News November 8, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (நவ-07) இரவு 10 மணி முதல் இன்று
(நவ.8) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 8, 2025
ராணிப்பேட்டை மக்களுக்கு விழிப்புணர்வு செய்தி

இன்று (நவ.7) ராணிப்பேட்டை காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் whatsapp அல்லது பிற செய்திடல் பயன்பாடுகள் மூலம் அனுப்பப்படும் ஆப் கோப்புகளை பதிவிறக்கம் செய்வதை தவிர்க்கவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் உங்கள் தனிப்பட்ட தகவல்களை திருடக்கூடிய தீங்கு விளைவிக்கும் தீப்பொருள் இருக்கலாம் என விழிப்புணர்வு செய்தி வெளியிட்டுள்ளது. அவசரத்துக்கு/ உதவிக்கு அழைக்கவும்:1930 என தெரிவிக்கப்பட்டுள்ளது
News November 7, 2025
ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் சந்திரகலா தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (நவ.07) விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் தனலிங்கம் இணை இயக்குநர் செல்வராஜ் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் முதுநிலை மண்டல மேலாளர் ஏகாம்பரம் மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர். பின் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.


