News May 9, 2024

புகையிலை விற்ற 2 கடைக்கு அபராதம்

image

தர்மபுரி, கடத்தூர் பேருந்து நிலையம் பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்ற ஒரு கடைக்கும், புது ரெட்டியூர் சாலையில் புகையிலை விற்ற ஒரு கடைக்கும் தலா 25,000 விதம் 50 ஆயிரத்தை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் பானு சுஜாதா உத்தரவின் பேரில் , மொரப்பூர் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் நந்தகோபால் இன்று அபராதமாக விதித்தார். உடன் கடத்தூர் காவல் நிலைய போலீசார் இருந்தனர்.

Similar News

News November 4, 2025

தருமபுரியில் தொழுநோய் கணக்கெடுப்பு பணி தீவிரம்

image

தருமபுரி மாவட்டத்தில் சுகாதார துறை சார்பாக தொழுநோய் கணக்கெடுப்பு முகாம் இன்று (நவ.04) நடைபெற்றுவருகிறது. தனியார் கல்லூரி மாணவர்கள், நகராட்சி உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று தொழுநோய்கான அறிகுறிகளை சோதனை செய்கின்றனர். மேலும் தொழுநோய் குறித்த விழிப்புணர்வு மற்றும் மருத்துவசிகிச்சை முறைகளையும் எடுத்துறைக்கின்றனர். இதில் சுகாதார துறை மற்றும் துறை சார்ந்த அலுவலகர்கள் ஈடுபடுகின்றனர்.

News November 4, 2025

தருமபுரி: வீட்டு உரிமையாளர்களே உஷார்!

image

தருமபுரி மாவட்ட மக்களே…, வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, இனி அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் டிஜிட்டல் முறையில் முத்திரையிடப்பட வேண்டும். மேலும் இது தவறினால், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 4, 2025

தருமபுரி: சார்பு நீதிமன்றத்தில் பரபரப்பு!!

image

தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டியில், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல், சார்பு நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நீதிமன்றங்கள், 2008ல் தொடங்கி, 17 ஆண்டுகளாக தனியார் கட்டிடத்தில் எவ்வித வசதிகளுமின்றி செயல்பட்டு வருகிறது. வருவாய் துறை மூலம் இடம் தேர்வு செய்யப்பட்டும், இதுவரை கட்டிடம் கட்டாததால். அதனால் வக்கீல்கள் நேற்று(நவ.03) கோர்ட் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

error: Content is protected !!