News February 7, 2026
2 தொகுதிகளில் விஜய் போட்டியா?

தவெக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விநியோகம் நேற்று தொடங்கியது. விஜய் தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும் என பலர் விருப்ப மனு அளித்து வரும் நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலில் விஜய் 2 தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருச்சி கிழக்கு, விருகம்பாக்கம் (அ) வேளச்சேரி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடவுள்ளதாக கூறப்படுகிறது.
Similar News
News February 14, 2026
உங்க காதல் Success ஆச்சா?

காதலர் தினத்தில் பரிசுகள், முத்தங்கள் என அன்பை பரிமாறி காதல் ஜோடிகள் மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர். இன்னொரு புறம், நீண்ட நாள்களாக காதலை சொல்லலாமா வேண்டாமா என தயக்கம் காட்டியவர்கள் இன்று தங்களது க்ரஷிடம் புரொபோஸ் செய்திருப்பீர்கள். ஒருசிலர் இம்முறையும் பயத்தில் காதலை சொல்லாமல் ஒரு தலை காதலை தொடர்வீர்கள். உங்களுடைய புரொபோசலுக்கு வந்த பதில், காதலிக்கு கொடுத்த பரிசு என்ன? கமெண்ட்ல சொல்லுங்க
News February 14, 2026
தினமும் பாதாம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுவது உடலுக்கு பல நன்மைகளை அளிக்கிறது. இதில் உள்ள புரதம், நார்ச்சத்து மற்றும் நல்ல கொழுப்பு அமிலங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. நினைவாற்றலை அதிகரிக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும், சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் பாதாம் துணைபுரிகிறது. மேலும், இது ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி நீரிழிவு நோய் அபாயத்தை குறைக்கிறது.
News February 14, 2026
உங்க சேமிப்புக்கு அதிக வட்டி வேண்டுமா? இதை படிங்க!

உங்கள் SBI வங்கி சேமிப்பு கணக்கில் பணத்திற்கு அதிக வட்டி கிடைக்கவில்லையா? கவலைப்படாதீங்க! மல்டி ஆப்ஷன் டெபாசிட் திட்டம் (MODS) மூலம், உங்கள் சேமிப்புக் கணக்கில் உள்ள பணம் ஒரு குறிப்பிட்ட வரம்பை தாண்டினால், அது தானாகவே Fixed Deposit-க்கு மாற்றப்பட்டு, அதற்குரிய கூடுதல் வட்டி உங்களுக்கு கிடைக்கும். எந்தவொரு ஆபத்தும் இல்லாமல் சேமிப்பில் உள்ள பணத்திற்கு அதிக வட்டி பெறலாம்.


