News February 7, 2026
கூட்டணி பற்றிய செய்திகளில் உண்மையில்லை: தவெக

தவெக காங்கிரஸுடன் ரகசியமாக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாக தொடர்ந்து செய்தி வருகிறது. இந்நிலையில், கூட்டணி விவகாரத்தில் தவெகவை பிற கட்சிகளுடன் தொடர்புபடுத்தி வரும் செய்திகளில் துளியும் உண்மையில்லை என தவெக மாநில ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் தெரிவித்துள்ளார். தங்களின் கூட்டணிப் பேரங்களை உயர்த்திக் கொள்வதற்காக பல கட்சிகள் உண்மையற்ற தகவல்களை பரப்பி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
Similar News
News February 20, 2026
கபில் தேவ் பொன்மொழிகள்

▶நீங்கள் கடினமாக உழைக்கத் தயாராக இருந்தால், உங்களால் எதையும் சாதிக்க முடியும். ▶அதிர்ஷ்டம் என்பது உழைப்பவர்களுக்கு மட்டுமே துணை நிற்கும்.▶உங்களை நீங்களே நம்பவில்லை என்றால், வேறு யாரும் உங்களை நம்ப மாட்டார்கள் .▶வெற்றி என்பது ஒரு பயணம், அது இலக்கு அல்ல. ஒவ்வொரு தோல்வியும் அடுத்த வெற்றிக்கான ஒரு பாடம். ▶ எப்போதும் நேர்மறையாகச் சிந்தியுங்கள். எதிர்மறை எண்ணங்கள் உங்களைச் சோர்வடையச் செய்யும்.
News February 20, 2026
கால்பந்து விளையாடிய போது MP திடீர் மரணம்!

மேகாலயாவில் கால்பந்து மைதானத்தில் உள்ளூர் MP ரிக்கி சிங்கோன் உயிரிழந்தது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தனது நண்பர்களுடன் உற்சாகமாக கால்பந்து விளையாடிய போது, அவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அருகில் இருந்த ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்ற போது அங்கு டாக்டர் இல்லை. உடனடியாக அங்கு இருந்து வேறு ஹாஸ்பிடலுக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையிலும், அவரின் உயிரை காப்பாற்ற முடியவில்லை.
News February 20, 2026
எப்ஸ்டீன் பைல்ஸ்.. இங்கிலாந்து மன்னரின் தம்பி கைது!

<<19008416>>எப்ஸ்டீன் பைல்ஸில்<<>> வெளியான தகவல்கள் உலக நாடுகளை அதிர வைத்தது. இதில் புதிய திருப்பமாக இங்கிலாந்து மன்னரின் சகோதரர் ஆண்ட்ரூவை போலீசார் கைது செய்தனர். 2010-ம் ஆண்டு இங்கிலாந்தின் சிறப்பு வர்த்தகத் தூதராக இருந்தபோது ஆண்ட்ரூ அரசின் ரகசிய அறிக்கைகளை, பாலியல் குற்றவாளியான எப்ஸ்டீனுக்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது. சட்டத்தின் முன் அனைவரும் சமமே என தம்பியின் கைது குறித்து மன்னர் சார்லஸ் தெரிவித்துள்ளார்.


