News February 7, 2026
தேர்தலில் TN vs NDA இடையே தான் போட்டி: ஸ்டாலின்

துரோகிகளும் எதிரிகளும் சேர்ந்து ஒட்டுமொத்த TN-ன் சுயமரியாதையை அடகுவைக்க பார்க்கிறார்கள் என விருதுநகரில் ஸ்டாலின் பேசியுள்ளார். வரும் தேர்தலில் TN-க்கும், NDA-க்கும் இடையே தான் போட்டி எனக் கூறிய அவர், இளைஞரணியின் ஆதரவு தொடர்ந்து இருந்தால் திமுகவை இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது எனத் தெரிவித்தார்.
Similar News
News February 18, 2026
₹6,000 வரை விலை உயருகிறது.. உடனே வாங்குவது நல்லது!

கோடைக்காலம் தொடங்க உள்ள நிலையில், நடப்பு காலாண்டுக்குள் AC விலை 10 – 15% வரை விலை உயரும் என அத்துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவித்துள்ளார். மூலப்பொருள்களின் விலை அதிகரிப்பு, AC தயாரிப்புக்கு முக்கியமான செம்பு விலை உயர்வு, அந்நியச் செலாவணி மாற்றங்களே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாம். இதனால், சுமார் ₹40,000-க்கு விற்பனையாகும் ஒரு AC-ன் விலை சுமார் ₹6,000 வரை விலை உயரும் எனக் கூறப்படுகிறது.
News February 18, 2026
அம்மா உணவகங்கள் மூடப்பட்டது ஏன்? SP வேலுமணி

பட்டினப்பாக்கம் உள்பட பல இடங்களில் அம்மா உணவகங்கள் மூடப்பட்டது குறித்து சட்டமன்றத்தில் SP வேலுமணி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் KN நேரு, சாலை பணிகளுக்காக சில இடங்களில் அம்மா உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், அப்பணிகள் முடிந்ததும் அவை உடனடியாக திறக்கப்படும் என்றும் தெரிவித்தார் அத்துடன் அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் அம்மா உணவகங்கள் சிறப்பாக செயல்படுவதாகவும் கூறியுள்ளார்.
News February 18, 2026
லிஃப்டில் கண்ணாடி ஏன் வைக்கப்படுகிறது?

➤லிஃப்ட் போன்ற மூடிய இடங்களில் கிளாஸ்ட்ரோஃபோபியாவால் யாரும் பதற்றமடையாமல் இருக்க கண்ணாடிகள் வைக்கப்படுகின்றன ➤லிஃப்டில் பயணிப்பவரின் கவனத்தை கண்ணாடிகள் திசைதிருப்பும் என்பதால் சலிப்பின்றி பயணிக்க முடியும் ➤கண்ணாடியின் மூலம் பின்னால் இருப்பவர்களையும் பார்க்கமுடியும் என்பதால், பயணிகளுக்கு பாதுகாப்பான உணர்வை ஏற்படுத்தும். 1% பேருக்கு மட்டுமே தெரிந்த தகவலை SHARE பண்ணுங்க.


