News May 9, 2024
விரட்டி விரட்டி கடித்த நாய்கள், 15 பேர் காயம்

பொன்னமராவதி அருகே இன்று ஒரே நாளில் 15 பேரை நாய் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சொக்கநாதபட்டியில், தெரு நாய்கள் அப்பகுதியில் சென்றவர்களை விரட்டி கடித்ததில் பலர் காயமடைந்தனர். சென்னையில் சிறுமி ஒருவரை வளர்ப்பு நாய் கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இதுபோன்று நாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது.
Similar News
News February 22, 2026
கடலூர்: குளத்தில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு – சோகம்

சேத்தியாத்தோப்பு அடுத்த ஆனைவாரியை சேர்ந்தவர் பாலாஜி மகள் பவித்ரா (8). அரசு பள்ளியில் 3-ஆம் வகுப்பு படிக்கும் பவித்ரா நேற்று(பிப் 21) அதே ஊரில் உள்ள நிலத்திற்கு தனது தாத்தா கருணாநிதியுடன் சென்றார். அப்போது அங்குள்ள குளம் அருகில் விளையாடிக் கொண்டிருந்த பவித்ரா, திடீரென குளத்தில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தாள். இதுகுறித்து சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News February 22, 2026
CM ஸ்டாலின் Lion இல்ல.. லையர்: தமிழிசை

ஆன்லைனிலும், ஆஃப்லைனிலும் தானே லயன் என சொல்லும் CM உண்மையில் லயன் கிடையாது லையர்(Liar-பொய்யர்) என தமிழிசை விமர்சித்துள்ளார். CM நிறைய பொய் சொல்வதாக சாடிய அவர், மத்திய அரசு உதவாமல் எப்படி TN முன்னுக்கு வர முடியும் என கேட்டுள்ளார். மேலும், அமைச்சர் நேரு மீது நடவடிக்கை எடுக்க ஆதாரங்கள் இருப்பதாகவும், குற்றங்களை செய்துவிட்டு பழிவாங்கும் நடவடிக்கை என கூறுவது வழக்கமாகிவிட்டது எனவும் தெரிவித்துள்ளார்.
News February 22, 2026
PM மோடி தந்திரசாலி: வைகோ

வாஜ்பாய் மற்றும் அத்வானி காலத்து பாஜகவுக்கும், தற்போதைய பாஜகவுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது என வைகோ கூறியுள்ளார். வாஜ்பாய் மதச்சார்பின்மையை மதித்தவர் என கூறிய அவர், PM மோடி தந்திரசாலி, அவர் TN-ஐ ஏமாற்ற பார்க்கிறார் என்றார். மேலும், வந்தே மாதரத்தை அனைவரும் பாடுவதில் சிக்கல் உள்ளது எனவும் இதை கட்டாயமாக்க முயற்சிப்பது மதச்சார்பின்மைக்கு எதிரானது என்றும் தெரிவித்துள்ளார்.


