News February 7, 2026
செங்கை: வங்கி சேவை இப்போது உங்கள் விரல் நுனியில்

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.
Similar News
News February 11, 2026
செங்கல்பட்டில் கூண்டோடு கைது!

செங்கல்பட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. அலுவலர்களுக்கு சிறப்பு பாதுகாப்புச் சட்டம், 10 சதவீத ஓய்வூதிய பிடித்தம் ரத்து, காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. போராட்டத்தில் 30 பெண்கள் உட்பட 100 பேரை போலீசார் கூண்டோடு கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
News February 11, 2026
செங்கல்பட்டு: உடல் தூக்கி வீசப்பட்டு பலி

சிங்கபெருமாள் கோவில் அடுத்த பாரேரியை சேர்ந்தவர் கோபால் (48). இவர், தன் வீட்டிலிருந்து பைக்கில் மகேந்திரா சிட்டிக்கு சென்றுள்ளார். அப்போது ஜி.எஸ்.டி., சாலையில் மின்வாரிய அலுவலகம் அருகில் சென்ற போது பின்னால் தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டு நோக்கி வந்த கார், பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கோபால், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News February 11, 2026
செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று (பிப்.10) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


