News May 9, 2024
போராட்டத்தை வாபஸ் பெற்ற AIE ஊழியர்கள்

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (AIE) ஊழியர்கள் தங்களது வேலை நிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர். விஸ்தாரா ஏர்லைன்ஸுடன் AIE-ஐ இணைப்பதை எதிர்த்து போராட்டத்தில் குதித்த ஊழியர்களின் பிரதிநிதிகளுடன் AIE நிர்வாகம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இதில், இருதரப்புக்கும் இடையே சமரசம் ஏற்பட்டதை அடுத்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் 25 மூத்த ஊழியர்களை பணி நீக்கம் செய்த உத்தரவை அந்நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது.
Similar News
News February 18, 2026
அம்மா SORRY.. நான் சாகப் போறேன்

தற்கொலை செய்து கொண்ட சேலத்தை சேர்ந்த சண்முகபிரியாவின்(22) கடைசி எழுத்துக்கள் இவை. கெளதம் என்பவரை காதலித்த, சண்முகபிரியா, அவரின் நடத்தை சரியில்லாததாக கூறி, பிரேக் அப் செய்துள்ளார். ஆத்திரமடைந்த கௌதம் திருமணம் செய்யாவிட்டால் Private போட்டோக்களை வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார். மன உளைச்சலுக்கு ஆளான சண்முகபிரியா, ‘அவன வாழ விடாதீங்க’ என எழுதி வைத்துவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
News February 18, 2026
திருச்சி, தஞ்சைக்கு வருகை தரும் PM மோடி

வரும் மார்ச்சில் PM மோடி, 3 முறை TN வரவுள்ளதாக பாஜக தரப்பில் கூறப்படுகிறது. மார்ச் 1-ல் மதுரையில் நடைபெறும் NDA பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் அவர், மார்ச் 6-ம் தேதி வேலூர் பொதுக்கூட்டத்திலும் கலந்துகொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அவர் மார்ச் 11-ல் திருச்சி, தஞ்சை வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலையொட்டி PM மோடியின் அடுத்தடுத்த தமிழக வருகை முக்கியத்துவம் பெறுகிறது.
News February 18, 2026
Election: தமிழகம் வருகிறார் ஞானேஷ் குமார்

CEC ஞானேஷ் குமார், பிப்.26, 27-ல் தமிழகம் வரவிருப்பதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த மாதம் 2-வது வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், அனைத்துக் கட்சி நிர்வாகிகளுடன், அவர் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார். இந்த ஆலோசனைக்கு பிறகு, மாநில தேர்தல் அதிகாரிகள், சட்டப்பேரவை தேர்தலுக்கான பணியை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.


