News February 7, 2026
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உள்ளகக் குழு (பெண்கள் பாதுகாப்புக்கான அலுவலக குழு) அமைக்க வேண்டும். தவறும் நிறுவனங்களுக்கு பணியிடத்தில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் சட்டம் 2013ன் படி ரூ. 50,000 அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கூடுதல் விவரங்களுக்கு 04364212429 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்
Similar News
News February 12, 2026
மயிலாடுதுறை: இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.
News February 12, 2026
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கத்தில் ஒப்பந்த அடிப்படையில் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியுடையோர் தேவையான சான்றுகளுடன் வருகிற பிப்ரவரி 16ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் விண்ணப்பிக்க வேண்டும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News February 12, 2026
மயிலாடுதுறை: சட்டவிரோத மது விற்றவர் கைது!

பாலையூர் காவல் சரகம் கோனேரிராஜபுரம் பகுதியில் சட்டவிரோதமாக புதுச்சேரி மதுபானம் விற்கப்படுவதாக போலீசார் ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் மயிலாடுதுறை மதுவிலக்கு பிரிவு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது கோனேரிராஜபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுதாகரன் (29) என்பவர் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 110 லிட்டர் பாண்டி சாராயத்தை பறிமுதல் செய்து சுதாகரனை போலீசார் கைது செய்தனர்.


