News February 7, 2026
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

இராமநாதபுரம் மாவட்டத்தில், இன்று (பிப்.06) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News February 11, 2026
பரமக்குடியில் விபத்து; சம்பவ இடத்திலேயே பலி!

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி, முத்துசெல்லாபுரம், நான்கு வழிச்சாலை அருகே கார் – பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பைக்கில் சென்ற முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில் காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். அவரிடம் இருந்த ஆதார் கார்டின் அடிப்படையில் இறந்தவர் ஆறுமுகம் கந்தன், எனவும் ஊர் உறையூர் என தெரியவந்துள்ளது.
News February 11, 2026
இராம்நாடு: சொந்த வீடு கட்ட சூப்பர் திட்டம்

உங்கள் சொந்த வீடு கனவை நிறைவேற்றும் சூப்பர் திட்டமாக உள்ளது பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டம். இத்திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு வீடு கட்ட ரூ.2.30 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. சொந்த வீடு இல்லாதவர்கள் இந்த <
News February 11, 2026
இராமநாதபுரம்: 2.5 வயது குழந்தை பலியான சோகம்!

கடலாடி அருகே சிக்கல் மேற்கு தெருவைச் சேர்ந்த சரத்பாபு–நதியாதேவி தம்பதியின் மகன் அர்னிஷ்(2.5) திங்கள்கிழமை மாலை வீட்டருகே பெட்டிக்கடை முன்பு விளையாடிக் கொண்டிருந்த போது, கடை சரிந்து அவர் மீது விழுந்தது. பலத்த காயமடைந்த சிறுவனை கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சம்பவம் குறித்து சிக்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


