News February 6, 2026

தி.மலை: மின் தடை புகாரா? மின்னல் வேகத்தில் தீர்வு!

image

தி.மலை மக்களே உங்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News February 14, 2026

அண்ணாமலையார் கோயிலில் நடிகர் சசிகுமார்!

image

திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோயிலில் நடிகர் சசிகுமார், நடிகை சைத்ரா நேற்று(பிப்.13) சுவாமி தரிசனம் செய்தனர். சம்பந்த விநாயகர், அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன் சந்நிதிகளில் வழிபட்ட அவர்கள், மகாதீபம் ஏற்றப்படும் மலையையும் வணங்கினர். பின்னர் கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. ‘மை லார்ட்’ திரைப்படம் வெற்றிபெற வேண்டி தரிசனம் செய்ததாக தெரிவித்தனர்.

News February 14, 2026

தி.மலை: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000

image

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 14, 2026

தி.மலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்!

image

திருவண்ணாமலையில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக தெற்கு ரயில்வே விழுப்புரம் – திருவண்ணாமலை இடையே முன்பதிவில்லா MEMU சிறப்பு ரயில்களை இயக்குகிறது. நாளை(பிப்.15) (ஞாயிறு) மற்றும் பிப்.16 (திங்கள்) ஆகிய நாட்களில் இந்த ரயில்கள் சேவையில் இருக்கும். கூட்ட நெரிசலை குறைத்து பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!