News February 6, 2026
திருவள்ளூர்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க
Similar News
News February 12, 2026
திருத்தணியில் 9 மாத குழந்தை பரிதாப பலி!

மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் சுனில் சலீம்(32). இவருக்கு, சீதா(27) என்ற மனைவியும், விதிசா என்ற 9 மாத குழந்தையும் உள்ளனர். கனகம்மாசத்திரத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று(பிப்.11) பசியால் அழுத குழந்தைக்கு, தாய் சீதா தாய்ப்பால் கொடுத்தார். அப்போது, குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்தது. உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர்.
News February 12, 2026
திருவள்ளூரில் தலை நசுங்கி கொடூர பலி!

எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் ஊராட்சியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் முருகன்(69). இவரது மனைவி பெரியபாளையம் அரசுப் பள்ளி ஆசிரியையாக பணி புரிகிறார். இந்நிலையில், நேற்று(பிப்.11) தனது சைக்கிளில் பெரியபாளையம் அரசுப் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, மேம்பால சாலை வளைவில் திரும்பும் போது, அந்தப் பக்கம் வந்த லாரி மோதியதில், லாரியின் சக்கரத்தில் சிக்கி, தலை நசுங்கி உயிரிழந்தார்.
News February 12, 2026
கும்மிடிப்பூண்டியில் பெரும் துயர சம்பவம்!

கும்மிடிப்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் நூர். இவர், மாதச் சீட்டு நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், சீட்டு கட்டியவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்க முடியாததால் நூர் தீக்குளிக்க முயன்றார். இதனைக் கண்ட அவரது மகன் அமானுல்லா தனது தாயை காப்பாற்ற முயன்றார். அப்போது இருவரும் பலத்த தீக்காயம் ஏற்பட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று அமானுல்லா உயிரிழந்தார்.


