News February 6, 2026
வெள்ளி விலை 2 நாள்களில் ₹40,000 குறைந்தது

தங்கம் விலையைப் போன்றே வெள்ளி விலையும் இன்று (பிப்.6) குறைந்துள்ளது. 1 கிராம் வெள்ளி ₹20 குறைந்து ₹280-க்கும், 1 கிலோ வெள்ளி ₹20,000 குறைந்து ₹2.80 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. 2 நாள்களில் மட்டும் கிராமுக்கு ₹40-ம், கிலோவுக்கு ₹40,000-ம் குறைந்துள்ளது. அதேநேரம், தங்கமும் சவரனுக்கு ₹1,600 குறைந்துள்ளதால் நகைப் பிரியர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Similar News
News February 15, 2026
முகத்தை பளபளப்பாக்கும் பியூட்டி ஃபேஸ் மாஸ்க்!

சருமத்தைப் பாதுகாக்க தாக்காளி மிகவும் உதவும் என நிபுணர்கள் கூறுகின்றனர். கரும்புள்ளிகள், எண்ணெய் பசை உள்ளிட்ட பாதிப்புகளை குறைக்க தக்காளி பேஸ் பேக் உதவுமாம். அதற்கு 2 ஸ்பூன் தக்காளி சாறு, 1 ஸ்பூன் தேன், சிறிது தயிர் ஆகியவற்றைக் கலந்து பேக் தயாரிக்கவும். இந்த பேக்கை 20 நிமிடங்கள் முகத்தில் வைத்திருக்கவும். வாரத்திற்கு 2 (அ) 3 முறை இந்த பேக்கை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்குமாம்.
News February 15, 2026
ரஷ்யாவிடம் இந்தியா எண்ணெய் வாங்காது: US

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக இந்தியா உறுதியளித்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். இந்திய – அமெரிக்க வணிக ஒப்பந்தம் கையெழுத்தான போதே இதை டிரம்ப் தெரிவித்திருந்தார். அதேசமயம் கச்சா எண்ணெய் வாங்கும் விவாகரத்தில் இந்தியா தன்னிச்சையாகவே முடிவெடுக்கும் என மீண்டும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
News February 15, 2026
வரலாற்றில் இன்று

*1564 – இத்தாலி வானியலாளர் கலீலியோ கலிலி பிறந்த நாள் *1942 – இரண்டாம் உலகப்போரின் போது சிங்கப்பூரில் இருந்த பிரிட்டீஷ் படைகள் ஜப்பானியர்களிடம் சரணடைந்தனர். *1989 – 9 ஆண்டுகள் ஆக்கிரமிப்புக்கு பின் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய சோவியத் படைகள் *1982 – நடிகை மீரா ஜாஸ்மின் பிறந்த தினம். *2017 – PSLV-C37 ராக்கெட் மூலம் 104 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி இஸ்ரோ உலக சாதனை படைத்தது.


