News February 6, 2026

தருமபுரியில் உடல் தூக்கி வீசப்பட்டு பலி!

image

வெள்ளோலைத்தை சேர்ந்த மகேஷ் குமார் (19), தருமபுரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர் தருமபுரி ராஜாபேட்டை அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த வாகனம் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த மகேஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக தருமபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News

News February 8, 2026

தருமபுரி: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3000

image

இ-ஷ்ரம் அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். இதை 16-59 வயதுக்குள் உள்ள, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் பெறலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். PM-SYM மூலம் 60 வயதுக்கு பின் ரூ.3,000 மாத பென்ஷன் பெறலாம். ஆதார், மொபைல் எண் வங்கி விவரங்களுடன் <>இங்கே கிளிக்<<>> செய்து இலவசமாக பதிவு செய்யலாம். SHARE IT!

News February 8, 2026

தருமபுரி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்

image

தருமபுரி மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் (ம) அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE IT!

News February 8, 2026

தருமபுரியில் ஆட்சியர் ஆய்வு!

image

தருமபுரி பேருந்து நிலையம் திறந்து வைத்ததை தொடரந்து பொதுமக்கள் அனைவரும் அனைத்து மாவட்டங்களுக்கும் மற்றும் அனைத்து ஊர்களுக்கும் பயனம் செய்வதற்கு ஏதுவாக அனைத்து விதமான ஏற்பாடுகள் மற்றும் வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பதை நான்கு ரோடு சந்திப்பில் மாவட்ட ஆட்சியர் சதீஸ் இன்று (பிப்.7) ஆய்வு மேற்கொண்டார். உடன் அரசு துறை அலுவலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!