News February 6, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (பிப்.6) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
Similar News
News February 15, 2026
ELECTION: முக்கிய தேதியை அறிவித்தார் அர்ச்சனா பட்நாயக்

சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே நாளை மறுதினம்(பிப்.17) இறுதிப் பட்டியல் வெளியாகும் என ECI கூறியிருந்த நிலையில், வரும் 23-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியலானது வெளியிடப்படும் என தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், இந்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
News February 15, 2026
CINEMA 360°: ஜெயிலர் 2 ரிலீஸ் தேதி இதுவா?

ரஜினியின் ஜெயிலர் 2 படம் வரும் ஜூன் மாதம் 11-ம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது *தனுஷ் – ஹெச். வினோத் படம் தள்ளிப்போகலாம் என தகவல் வெளிவந்துள்ளது *விஜய் தொடர்ந்து சினிமாவில் நடிக்க வேண்டும் என சசிகுமார் தெரிவித்துள்ளார் * ‘மகான் 2’ படத்தின் முதற்கட்ட வேலைகள் நடைபெற்று வருவதாக கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார்.
News February 15, 2026
விஜய்யை பார்த்து ஸ்டாலின், உதயநிதிக்கு பயம்: TTV

விஜய்யால் திமுக கடும் பாதிப்புக்குள்ளாகும் என TTV தினகரன் கூறியுள்ளார். விஜயகாந்த் 60 கி.மீ புயல் என்றால், விஜய் 100 கி.மீட்டருக்கு கூட வீசலாம் என்ற அவர், அதனால்தான் விஜய்யை கண்டு CM-க்கும், உதயநிதிக்கும் பயம் என்றும் பேசியுள்ளார். மேலும், 2006-ல் திமுக மைனாரிட்டியாக இருந்தபோதே கூட்டணி ஆட்சி அமைந்திருக்க வேண்டும் என்ற அவர், சோனியா காந்தியின் பெருந்தன்மையால் அது நடக்கவில்லை என தெரிவித்துள்ளார்.


