News February 5, 2026
ராகுல்காந்தியின் ஆடையை விமர்சிக்கும் பாஜக

காதி மற்றும் சுதேசி உடைகளின் மீது மரியாதை இல்லாதபோது, ராகுல் காந்திக்கு பார்லிமெண்ட் மீது எப்படி மரியாதை இருக்கும் என பாஜக MP நிஷிகாந்த் துபே விமர்சித்துள்ளார். டெல்லியில் பேசிய அவர், இந்திரா காந்தி போன்ற காங்., தலைவர்கள் சேலை அணிந்தனர், ஆண்கள் குர்தா அணிந்தனர். ஆனால், ராகுல் காந்தி மட்டும் கிழிந்த, கந்தலான பேண்ட், சட்டை அணிவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். அவரது கருத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீங்க?
Similar News
News February 14, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: மடியின்மை ▶குறள் எண்: 609▶குறள்: குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
மடியாண்மை மாற்றக் கெடும் ▶பொருள்: தன்னை ஆட்கொண்டுள்ள சோம்பலை ஒருவன் அகற்றிவிட்டால், அவனது குடிப்பெருமைக்கும், ஆண்மைக்கும் சிறப்பு தானே வந்து சேரும்.
News February 14, 2026
கூட்டணி: OPS போடும் புது கணக்கு

OPS சொன்ன தை மாதம் முடிந்து 2 நாள்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை அவர் கூட்டணி முடிவை தெளிவுப்படுத்தவில்லை. இதற்கிடையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அதில், தேர்தல் தேதி அறிவித்து, கூட்டணி முடிவாகி மற்ற கட்சிகள் வேட்பாளர்களை அறிவிக்கும் நிலை ஏற்பட்டால் யாரிடமும் கூட்டணி சேரமுடியாது; எனவே செங்கோட்டையன் மூலம் தவெகவில் கூட்டணி வைக்கலாமா என்று கருத்து கேட்டுள்ளாராம்.