News May 9, 2024
செங்கல்பட்டு மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (மே.09) 4 மணி வரை லேசான இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடையின் வெப்பம் அதிகமான நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பொழிவு ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 26, 2025
சிட்லபாக்கம் ஏரியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தாம்பரம் அருகேயுள்ள சிட்லப்பாக்கம் ஏரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தூய்மைபடுத்தும் பணியினை மாவட்ட ஆட்சியர் தி.சினேகா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவ்வப்போது ஏரியில் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆய்வின் போது தாம்பரம் மாநகராட்சி ஆணையர் சீ.பாலச்சந்தர் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
News September 26, 2025
செங்கல்பட்டு வரும் விஜய்

தவெக தலைவர் விஜய் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு வரும் அக்.25ஆம் தேதி சுற்றுப்பயணம் செய்ய இருந்த நிலையில், தற்போது அதற்கு பதிலாக பிப்ரவரி-21-2026 ம் தேதி சுற்றுப்பயணம் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் முதலில் சனிக்கிழமை மட்டும் சுற்றுப்பயணம் செய்து வந்த நிலையில், இப்போது ஞாயிற்று கிழமைகளிலும் மக்களை சந்திக்க உள்ளதால் நாளொன்றுக்கு 2 மாவட்டம் வீதம் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. (SHARE)
News September 26, 2025
செங்கல்பட்டு காவல்துறை அறிவுறுத்தல்

செங்கல்பட்டு மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வாகனங்கள் சாலையில் செல்லும் போது வெளிச்சம் குறைந்து காணப்படுகிறது. இதனால் வாகன விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் இழப்புகளும் ஏற்படுகின்றன. எனவே மழை பொழியும் நேரங்களில் வாகனத்தின் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு செல்லும்படி செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.