News February 5, 2026
எப்ஸ்டீன் சர்ச்சை.. மன்னிப்பு கோரினார் பில் கேட்ஸ்

எப்ஸ்டீனுடன் செலவழித்த ஒவ்வொரு கணத்திற்காகவும் வருந்துகிறேன். இதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என பில் கேட்ஸ் கூறியுள்ளார். முன்னதாக எப்ஸ்டீன் ஃபைல்ஸ் குறித்து பில் கேட்ஸ் பதிலளிக்க வேண்டும் என அவரது <<19051133>>Ex.மனைவி<<>> கூறியிருந்தார். இந்நிலையில், சிறுமிகள் குறித்து கசிந்த மின்னஞ்சல்களில் உள்ள குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானவை என்று அவர் விளக்கமளித்துள்ளார்.
Similar News
News February 20, 2026
தீய சக்திகளிடமிருந்து தமிழகத்தை மீட்போம்: விஜய்

அஞ்சலை அம்மாளின் நினைவு தினத்தையொட்டி, அவரது திருவுருவப்படத்திற்கு விஜய் மரியாதை செலுத்தினார். போராட்டக் களத்தில் பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதை அஞ்சலை அம்மாள் அன்றே நிரூபித்தவர் என தனது X பதிவில் விஜய் புகழாரம் சூட்டியுள்ளார். மேலும், தன் வாழ்வையே நாட்டுக்காக அர்ப்பணித்த அவரது வழியில், தீய சக்திகளிடமிருந்து தமிழகத்தை மீட்டெடுக்க உறுதியேற்போம் என பதிவிட்டுள்ளார்.
News February 20, 2026
திமுக தொகுதிப் பங்கீடு இதுதானா?

தேமுதிக வருகையால் 30+ தொகுதிகள் என்ற காங்., கோரிக்கையை DMK தலைமை நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது. 165 இடங்களில் களமிறங்குவதற்கு DMK திட்டமிட்டுள்ளதாம். காங்., 25, VCK 7, மதிமுக 5, DMDK 7+1(RS), CPI 6, CPI(M) 6, MNM 4, மமக 3, முஸ்லிம் லீக் 3, கொமதேக 2, SDPI 1, கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி, சு.க.முருகவேல் ராஜன் போன்றவர்களை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்கவும் DMK திட்டமிட்டுள்ளதாம்.
News February 20, 2026
நாளை பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் திருத்தேர் உற்சவத்தை முன்னிட்டு, நாளை (பிப்.21) விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம், பள்ளி, கல்லூரிகள், மாநில அரசு அலுவலகங்கள் இயங்காது என கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார். அதேபோல், பொன் மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு வட்டத்திற்கு பிப்.25 அன்று உள்ளூர் விடுமுறையாகும்.


