News February 5, 2026
ரேஷனில் இனி பொருள்கள் கிடைக்காதா? முக்கிய அப்டேட்

ரேஷன் கடைகளில் பொருள்களுக்கு பதிலாக பணம் கொடுக்க மத்திய அரசு திட்டமிடுவதாக கூறப்படுகிறது. இத்திட்டத்திற்கு இ-ரூபி என்ற டிஜிட்டல் முறை பயன்படுத்தப்பட உள்ளதாம். இதன்மூலம் மாதம் ஒருமுறை பணத்துக்கான வவுச்சர் பயனாளியின் மொபைலுக்கு வரும். இதனை பணமாக மாற்றி வங்கியில் வைக்கலாம் (அ) பொருளாகவும் வாங்கலாம். குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வழங்கும் தொகை வேறுபடும் என கூறப்படுகிறது. உங்கள் கருத்து?
Similar News
News February 6, 2026
திமுக அரசின் முகமூடி கிழிந்து விட்டது: அன்புமணி

தொழில் முதலீடுகளை பொறுத்தவரை திமுக அரசு தொடக்கம் முதலே பொய் மூட்டைகளை மட்டுமே அவிழ்த்துவிட்டு வருவதாக அன்புமணி விமர்சித்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் கையெழுத்தான தொழில் முதலீடுகளுக்கான ஒப்பந்தங்களில், வெறும் 8.20% மட்டுமே செயலாக்கம் பெற்றுள்ளன என்றும், ஒட்டுமொத்த தொழில் முதலீடுகளும் வந்து விட்டதை போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்தும் திமுக அரசின் முகமூடி கிழிந்து விட்டதாகவும் சாடியுள்ளார்.
News February 6, 2026
விடுமுறை.. இன்று முதல் 3 நாள்களுக்கு சிறப்பு பஸ்கள்

வார விடுமுறையையொட்டி, மக்கள் நெரிசலின்றி ஊர்களுக்குச் செல்ல போக்குவரத்துத் துறை சிறப்பு பஸ்களை அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து இன்று முதல் 3 நாள்களுக்கு சுமார் 750 பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன. இதுவரை 20,000-க்கும் மேற்பட்ட பயணிகள் முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. நீங்களும் உடனடியாக <
News February 6, 2026
டிரைவிங் லைசென்ஸ் தொலைந்து விட்டதா?

தொலைந்த டிரைவிங் லைசென்ஸை RTO அலுவலகம் செல்லாமலேயே ஆன்லைனில் பெறலாம் *<


