News February 5, 2026

வேலூர்: “அம்மா நான் சாக போறேன்…” மாணவன் தற்கொலை!

image

ரெட்டியார்பல்லியை சேர்ந்த ஜீவநேசன், குடும்பத்துடன் பெங்களூருவில் வசித்து வருகிறார். இவரது மகன் யோகநேசன் (14) 9-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் யோகநேசன் வீட்டில் சேலையால் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினான். போலீசார் கைப்பற்றிய கடிதத்தில் “படி படியென தொடர்ந்து வற்புறுத்துவதால்” தற்கொலை செய்து கொண்டதாக எழுதி இருந்தது. இதை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News February 19, 2026

வேலூர்: மெடிக்களில் மருந்து வாங்குறீங்களா? கவனம்!

image

சமீப காலங்களில் காலாவதியான மருந்துகள் & தவறான மருந்துகள் காரணமாக உயிரிழப்புகளும், பக்கவிளைவுகளும் ஏற்படுகிறது. ஒருவேளை நீங்கள் பயன்படுத்திய மருந்தினால் ஆபத்து இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், தாமதிக்காமல் 1800-180-3024 என்ற எண்ணில் புகார் செய்யவும். இந்த புகாரின் மூலம், குறிப்பிட்ட மருந்து ஆய்வு செய்யப்பட்டு, குறைபாடு இருப்பின் அந்த மருந்து தடை செய்யப்படும். அல்லது அபராதம் விதிக்கப்படும். ஷேர்!

News February 19, 2026

வேலூரில் பிணையமின்றி ரூ.40 லட்சம் கடனுதவி!

image

வேலூர் மாவட்ட மக்களே! சொந்தமாக தொழில் தொடங்க ஆசையா? கடன் வாங்க சொத்து ஏதும் இல்லையா? அரசு சார்பாக உங்களுக்கு ரூ.40 லட்சம் வரை பிணையமின்றி கடன் வழங்கப்படுகிறது. இந்த TNCGS திட்டத்தில் இணைய, உங்கள் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி ( TAICO) , TAMCO, மாவட்ட தொழில் மையங்களில் விண்ணப்பிக்கலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது பயன் தரும்.

News February 19, 2026

வேலூரில் காமுகனுக்கு 5 ஆண்டு சிறை!

image

தொரப்பாடியை சேர்ந்த மீர் பாகர் அலி (54). இவர் டியூசன் சென்டர் நடத்தி வந்தார். அதில் 14 வயது சிறுமியிடம் மீர் பாகர் அலி பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் மீர் பாகர் அலியை கைது செய்தனர். போக்சோ சிறப்பு கோர்ட்டில் நேற்று (பிப்.18) வழக்கை விசாரித்த நீதிபதி ராதா கிருஷ்ணன் மீர் பாகர் அலிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

error: Content is protected !!