News February 5, 2026

திமுகவிடம் புதிய டிமாண்ட் வைக்கும் விசிக

image

2021 தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்ட VCK, இம்முறை திமுகவிடம் கூடுதல் தொகுதிகளை கேட்டுப்பெற முயற்சிக்கிறது. திருப்போரூர், செய்யூர் உள்ளிட்ட வடமாவட்டங்களில் மட்டுமே களம் கண்ட VCK, தற்போது தெற்கு & மேற்கு மாவட்டங்களையும் குறிவைத்துள்ளது. தங்களுக்கு செல்வாக்கு உள்ள தொகுதிகளின் பட்டியலை VCK தயாரிப்பதாகவும், தொகுதிப் பங்கீட்டின் போது திமுகவிடம் டிமாண்ட் வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Similar News

News February 13, 2026

BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹1,600 குறைந்தது

image

தங்கம் விலை சவரனுக்கு ₹1,600 அதிரடியாக குறைந்து நகைப் பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. 1 கிராம் ₹200 குறைந்து ₹14,400-க்கும், 1 சவரன் ₹1,600 சரிந்து ₹1,15,200-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தொடர்ந்து தங்கம் விலை சரிந்து வருவதால் வரும் நாள்களிலும் விலை குறையும் என கூறுகின்றனர். அதேநேரம், தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

News February 13, 2026

₹5000 கொடுத்த CM.. முன்னாள் அமைச்சர் அட்டாக்

image

3 மாதத்துக்கான உரிமைத் தொகையை <<19125836>>CM வழங்கியதை<<>> வைகைச்செல்வன் விமர்சித்துள்ளார். 36 மாதங்கள் மகளிர் உரிமைத்தொகையை திமுக அரசு கொடுக்காமல் இருந்ததாக கூறிய அவர், அதிமுக அழுத்தம் கொடுத்தபின் தான் அதனை வழங்கியதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த நேரத்தில் 1.31 கோடி மகளிருக்கு ₹5000 வரவு வைத்தது முழுக்க முழுக்க அப்பட்டமான வாக்கு அரசியல் எனவும், இது மக்களுக்கான தொண்டு ச்ச்ஃப்க்க்ச்ஃப்

News February 13, 2026

மகளிர் உரிமைத் தொகை ₹3,000 + ₹2,000 வந்தது..

image

அனைத்து மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்கிலும் இன்று காலை ₹5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்குவதால் முன்கூட்டியே பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான உரிமைத் தொகை சேர்த்து ₹3,000 மற்றும் கோடைகால சிறப்புத் தொகுப்பாக ₹2,000 என சேர்த்து ₹5,000 கிரெடிட் ஆகியுள்ளது. இதனால் 1.31 கோடி உரிமைத் தொகை பயனாளிகள் இன்ப வெள்ளத்தில் மூழ்கியுள்ளனர்.

error: Content is protected !!