News February 5, 2026

UGC NET தேர்வு முடிவுகள் வெளியீடு

image

உதவிப் பேராசிரியர் தகுதித் தேர்வான யுஜிசி நெட் 2025 தேர்வு கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது. 80-க்கும் மேற்பட்ட பாடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வை சுமார் 7 லட்சம் பேர் எழுதிய நிலையில், தற்போது அதன் முடிவுகள் வெளியாகியுள்ளன. https://ugcnet.nta.nic.in/ தளத்தில் முடிவுகளை அறிந்துகொள்ளலாம். பாடவாரியாக கட் -ஆஃப் மதிப்பெண்கள், இறுதி விடைக்குறிப்பு ஆகியவையும் வெளியாகி உள்ளன.

Similar News

News February 14, 2026

விமல் பட பாணியை ஃபாலோ செய்கிறதா திமுக?

image

‘கலகலப்பு’ பட பாணியில் பெண்கள் வாக்கு அதிகமாக இருந்தால் நீங்கள்தான் வெற்றியடைவீர்கள் என்ற ஃபார்முலாவே ₹5,000 தொகையில் பிரதிபலிப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். சமீபத்தில் வெளியான வரைவு வாக்காளர் பட்டியலின்படி, TN-ல் 2.77 கோடி பெண் வாக்காளர்கள் உள்ளனர். இது ஆண் வாக்காளர்களை (2.66 கோடி) காட்டிலும் அதிகம். எனவே, இதுவும் திமுகவின் கணக்காக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. உங்கள் கருத்து என்ன?

News February 14, 2026

நடிகர் சைமன் மாரடைப்பால் காலமானார்.. குவியும் அஞ்சலி

image

பிரபல கன்னட நடிகரும், இயக்குநருமான ஜோ சைமன்(80) மாரடைப்பால் காலமானார். ஜோ சைமனின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு என கர்நாடக DCM சிவக்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், கன்னட நடிகர், நடிகைகள் பலரும் பெங்களூருவில் உள்ள சைமனின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ‘சாஹச சிம்ஹா’, ‘சிம்ஹா ஜோடி’ உள்ளிட்ட பல ஹிட் படங்களை இயக்கிய இவர், சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தின் நண்பர் ஆவார்.

News February 14, 2026

அமித் ஷாவை சந்திக்கும் CM ரங்கசாமி!

image

காரைக்கால் செல்லும் அமித் ஷாவை புதுச்சேரி CM ரங்கசாமி இன்று சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக – NR காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட உள்ளதாகவும், மதியம் 2.30 மணிக்கு இந்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைப்பதற்காக வருகிற<<19120407>> தேர்தலை புறக்கணிக்க போவதாக ரங்கசாமி<<>> அறிவித்த நிலையில், இந்த சந்திப்பு நடைபெறுகிறது.

error: Content is protected !!