News February 5, 2026
சிறப்பு யாகம் நடத்திய பொன்முடி?

தேர்தலில் எதிரிகளை வீழ்த்துவதற்காக Ex அமைச்சர் பொன்முடி, தனது புதிய வீட்டில் சிறப்பு யாகத்தை நடத்தியதாக ஊடகங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. தேர்தலில் வென்று மீண்டும் அமைச்சராகணும், வழக்குகளில் இருந்து விடுபடணும் என்ற வேண்டுதல்களுடன் யாகம் நடத்தினாராம். ரகசியமாக நடந்த இந்நிகழ்வு குறித்து அறிந்த திமுகவினர், கடவுள் நம்பிக்கை இல்லாதவர் தற்போது தேர்தலுக்காக மாறிவிட்டாரே என புலம்புகின்றனராம்.
Similar News
News February 13, 2026
கணவனுக்கு ரோஸ் டே கிப்ட்.. மனைவி மீது கேஸ்!

காதலர் தினத்திற்காக கணவருக்கு கிப்ட் கொடுத்த பெண் சர்ச்சையில் சிக்கியுள்ளார். பிஹாரில் இன்ஸ்டா இன்ப்ளூயன்சரான காஞ்சன் தேவி கணவருக்கு ‘ரோஸ் டே’ தினத்தில் Wine பாட்டிலை பரிசாக அளித்துள்ளார். இத்துடன், கையில் துப்பாக்கி வைத்திருக்கும் வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டார். பிஹாரில் மது & ஆயுதங்களை விளம்பரப்படுத்தும் வகையில் வீடியோ வெளியிடுவதற்கு தடை உள்ள, தற்போது அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
News February 13, 2026
CINEMA 360°: Clean Shave லுக்கில் ரஜினி

10 ஆண்டுகளுக்கு பிறகு, சிபி சக்கரவர்த்தி படத்திற்காக ரஜினி Clean Shave செய்துள்ளார். கடைசியாக கபாலி(2016) படத்திற்காக அவர் Clean Shave செய்திருந்தார் *‘வித் லவ்’ படம் 7 நாள்களில் ₹18 கோடி வசூலித்துள்ளதாம் *விஜய் தேவரக்கொண்டா, ரஷ்மிகாவின் திருமண ஆவண படத்தை Netflix ₹60 கோடிக்கு வாங்கவுள்ளதாம் *மத உணர்வை புண்படுத்துவதாக ‘டாக்ஸிக்’ படத்துக்கு எதிராக தேசிய கிறிஸ்டியன் அமைப்பினர் வழக்கு தொடுத்துள்ளனர்.
News February 13, 2026
மகளிரின் வங்கிக் கணக்கில் முன்பே ₹5,000.. எதற்கு?

₹5,000 முன்கூட்டியே வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டதற்கான காரணத்தை தமிழக அரசு தெரிவித்துள்ளது. மே மாதம் வரை மட்டுமே ஆட்சிக்கான அதிகாரம் இருப்பதால், அடுத்த 3 மாதங்களுக்கு சேர்த்து வரவு வைக்கப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ளது. மேலும், இலவசங்கள் தொடர்பான வழக்கு மார்ச் முதல் வாரத்தில் விசாரணைக்கு வரவுள்ளதாலும், நாளை (14-ம் தேதி) 2-வது சனி & பிப்.15 ஞாயிறு என்பதாலும் இன்றே வரவு வைக்கப்பட்டுள்ளதாம்.


