News February 5, 2026

எந்த நீரில் தலைக்கு குளிப்பது நல்லது?

image

தலைக்கு குளிக்கையில் நாம் பயன்படுத்தும் நீரும் முடி உதிர்வுக்கான காரணமாக அமைகிறது. அந்தவகையில் வெந்நீரில் தலைக்கு குளித்தால் கூந்தல் வறட்சியடையும், ஈரப்பதம் உறிஞ்சப்படும், அதிகப்படியான எண்ணெய் உற்பத்தியை ஏற்படுத்தக்கூடும். அதுவே, குளிர்ந்த நீரில் குளித்தால் முடியின் ஈரப்பதம் தக்கவைக்கப்படும், கூந்தல் ஆரோக்கியம் மேம்படும், தலைமுடி பளபளக்கும், முடி உதிர்வு தடுக்கப்படும். SHARE IT

Similar News

News February 13, 2026

கடன் வாங்கி உரிமைத் தொகை கொடுத்தாரா CM?

image

மகளிருக்கு ₹5,000 வரவு வைக்கப்பட்டது தோல்வி பயத்தின் அப்பட்டமான வெளிப்பாடு என அன்புமணி விமர்சித்துள்ளார். கூடுதலாக ₹6,550 கோடி கடன் வாங்கித்தான் இத்தொகை வழங்கப்பட்டிருப்பதாக கூறிய அவர், ஏற்கெனவே வாங்கி குவித்திருக்கும் ₹10 லட்சம் கோடி கடன் போதவில்லையா எனவும் கேட்டுள்ளார். மேலும், வரிகள் மூலம் ஒவ்வொரு குடும்பத்திடமிருந்து ஆண்டுக்கு சுமார் ₹25,000 கூடுதலாக பறிக்கப்படுகிறது எனவும் கூறியுள்ளார்.

News February 13, 2026

ToothBrush-ல் ஏன் இரண்டு கலர்கள் உள்ளது தெரியுமா?

image

பெரும்பாலான டூத் பிரஷ்களில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட நிறங்களில் Bristles இருக்கும். பிரஷ்களில் நடுப்பகுதியின் Bristle நிறம், எவ்வளவு அளவு பேஸ்ட் வைக்க வேண்டும் என்பதை குறிப்பதற்காக வடிவமைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இது அனைத்து பிரஷ்களுக்குமான பொதுவான விதி அல்ல. விழிப்புணர்வுக்காக கொண்டுவரப்பட்ட இந்த டிசைன் தற்போது அழகுக்காகவும், விளம்பர நோக்கத்திற்காகவும் வெவ்வேறு வடிவங்களை பெற்றுவிட்டன.

News February 13, 2026

வருங்கால PM-க்கு வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி

image

வங்கதேச நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக தாரிக் ரஹ்மானுக்கு PM மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வெற்றி வங்கதேச மக்கள் தாரிக் தலைமையின் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு சான்று என்ற அவர், இந்தியா வங்கதேசத்திற்கு ஆதரவாக தொடர்ந்து நிற்கும் எனவும் கூறியுள்ளார். மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்த தாரிக்குடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.

error: Content is protected !!