News February 4, 2026
தங்கம் விலை மேலும் குறைந்தது

சர்வதேச சந்தையில் தங்கம் விலை தற்போது சற்று சரிந்துள்ளது. அதன்படி 1 அவுன்ஸ்(28g) $4,895 ஆனது. இதனால், ஹைதராபாத் உள்ளிட்ட சில நகரங்களில் தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. இதே நிலை நீடித்தால் நாளை காலை இந்திய சந்தையில்(சென்னையிலும்) தங்கம் விலை சற்று குறைய வாய்ப்புள்ளது. கடந்த 4 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, நேற்றும், <<19045857>>இன்றும் உயர்வைக்<<>> கண்டதால் நடுத்தர மக்கள் சற்று கலக்கம் அடைந்தனர்.
Similar News
News March 19, 2026
விஜய்யுடன் கூட்டணி.. கடைசி நேர அரசியல் திருப்பம்

புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் தொடங்கியபின், அரசியல் களம் பல திருப்பங்களை சந்தித்து வருகிறது. பாஜக கூட்டணியில் இருந்து விலகி, தவெகவுடன் NR காங்., கூட்டணி அமைக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில், தங்கள் கூட்டணிக்கு வந்தால் தவெகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்குவோம் என NR காங்., பொதுச் செயலாளர் ஜெயபால் தெரிவித்துள்ளார். இதனிடையே, ரங்கசாமியுடன் புஸ்ஸி ஆனந்த் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளாராம்.
News March 19, 2026
உங்க ஊருக்கும் இப்படி ஒன்னு கண்டிப்பா இருக்கும்..

ஒவ்வொரு ஊருக்கும் ஒரு அடையாளம் இருப்பதை போன்று, அந்த ஊரை கண்டறிவதற்கும் ஒரு அடையாளம் கண்டிப்பாக இருக்கும். அது ஒரு கோயில், கடை, பஸ் ஸ்டாப் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். உதாரணமாக மலைக்கோட்டையை பார்த்துவிட்டால், திருச்சிக்கு வந்துவிட்டோம் என்ற ஃபீல் அந்த ஊரைச் சேர்ந்தவர்களுக்கு வந்துவிடும். அதேபோல், உங்கள் ஊர் வந்துவிட்டதை எதை வைத்து கண்டறிவீர்கள்? உங்கள் ஊரின் அடையாளத்தை கமெண்ட் பண்ணுங்க.
News March 19, 2026
எப்படி இருக்கிறது ‘யூத்’? Full review & Rating

லவ் பண்ணித்தான் கல்யாணம் பண்ணனும் என ஸ்கூல் படிக்கும் போது லவ்வரை தேடும் கென், படிப்பில் கவனமில்லாமல் இருக்கிறார். அவருக்கு காதல் கிடைத்ததா? படிப்பு என்னவானது? இதுவே ‘யூத்’ *பிளஸ்: கென் நல்ல ஆக்டிங். எமோஷனல் சீனில் சூரஜ், தேவதர்ஷினி கைத்தட்ட வைக்கிறார்கள். ஒளிப்பதிவும், GV-ன் இசையும் அசத்தல். இன்டர்வெல் சூப்பர். பல்ப்ஸ்: ஸ்கூல் காட்சிகள் சில இடங்களில் தொய்வை ஏற்படுத்துகிறது. Rating: 2.25/5.


