News February 4, 2026

அரசியலில் புதிய புயலை கிளப்பும் சசிகலா

image

அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணியை தீவிரப்படுத்தி வரும் நிலையில், சசிகலாவின் அடுத்த நகர்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சசிகலாவை மீண்டும் இணைக்க வாய்ப்பே இல்லை என <<19049108>>EPS <<>>கூறியிருந்தார். இதனையடுத்து, தனது ஆதரவாளர்களை போட்டியிட வைக்க சசிகலா முடிவெடுத்துள்ளார். புதிய அமைப்பு தொடங்குவதா அல்லது தனது சகோதரர் திவாகரனின் அண்ணா திராவிடர் கழகத்தின் சார்பில் போட்டியிடுவதா என ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

Similar News

News February 14, 2026

SC-ல் தானே வாதிட்டு வென்ற 19 வயது இளைஞர்

image

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சதுர்வேதி என்ற மாணவர் SC-ல் வழக்கில் வாதிட்டு வெற்றி பெற்றுள்ளார். நீட் தேர்வில் 2 முறை தேர்ச்சி(535 மதிப்பெண்) பெற்றும், அவருக்கு தனியார் கல்லூரிகளில் EWS ஒதுக்கீட்டில் MBBS சீட் கிடைக்கவில்லை. இதனால், அவரே SC-ல் வழக்கு தொடர்ந்து, வழக்கறிஞர் உதவியின்றி தானே வாதிட்டு வெற்றியும் பெற்றார். இதையடுத்து, EWS ஒதுக்கீட்டில் MBBS சீட் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

News February 14, 2026

பிரேமலதா மௌனத்திற்கு இதுவே காரணமா?

image

திமுக அரசு நேற்று மகளிரின் வங்கிக் கணக்கில் ₹5,000 வரவு வைத்ததை, தோல்வி பயத்தில் தருவதாக அதிமுக கூட்டணி கட்சிகள் விமர்சித்துள்ளன. ஆனால், இதுகுறித்து பிரேமலதா எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் உள்ளார். சமீபகாலமாக திமுக ஆட்சி மீதான விமர்சனங்களை குறைத்த அவர், திமுக கூட்டணியில் இணையும் நோக்கில்தான் தற்போதும் மகளிர் உரிமைத் தொகை குறித்து விமர்சிக்கவில்லை என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

News February 14, 2026

பறவைக் காய்ச்சலால் சிக்கன் சாப்பிட பயமா?

image

பறவைக் காய்ச்சலால் காகம் இறந்து விழுந்ததை அடுத்து, அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தது. இதனையடுத்து, சிக்கன் & முட்டையை சாப்பிடக்கூடாது என தகவல் பரவியது. இந்நிலையில், சிக்கன், முட்டையை நன்றாக வேகவைத்து சாப்பிடலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. காய்ச்சல், சளியால் மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக ஹாஸ்பிடல் செல்ல வேண்டும். சந்தேகங்களுக்கு 104-க்கு போன் செய்யலாம். SHARE

error: Content is protected !!