News February 4, 2026
மக்களை ஏமாற்றும் ஈபிஎஸ் – அமைச்சர் பெரியசாமி தாக்கு!

திண்டுக்கல்லில் அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “10 ஆண்டுகளில் எடப்பாடி பழனிச்சாமி கல்வி கடனை ஏன் ரத்து செய்யவில்லை?. மத்தியில் இருக்கும் மோடி அரசு கல்விக்கான நிதியை ஒதுக்கவில்லை. எடப்பாடி பழனிச்சாமி மக்களை ஏமாற்றி வாக்குகளை பெறுவதற்காக வாக்குறுதிகளை அறிவித்து வருகிறார். தன்னை பாதுகாத்து கொள்வதற்காகத்தான் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளார்” என கடுமையாக சாடினார்.
Similar News
News February 11, 2026
திண்டுக்கல்: ரூ.5 லட்சம் வரை இலவச காப்பீடு!

திண்டுக்கல் மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார்,வருமான சான்றிதழ் ஆகியவற்றுடன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். சந்தேகங்களுக்கு 1800425 3993 அழைக்கவும். SHARE IT
News February 11, 2026
திண்டுக்கல்லில் பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம் ▶️திண்டுக்கல் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0451-2460107▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 ▶️ Toll Free 1800 4252 441 ▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 ▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. (ஷேர் பண்ணுங்க)
News February 11, 2026
BREAKING: திண்டுக்கல் ஜல்லிக்கட்டில் வாலிபர் பலி

திண்டுக்கல் புகையிலைபட்டி ஜல்லிக்கட்டில், அழகர்கோவிலை சேர்ந்த காளை முட்டியதில் அலங்காநல்லூரை சேர்ந்த மாடுபிடி வீரர் பாலகுரு (24) கழுத்தில் படுகாயமடைந்தார். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


