News February 4, 2026
இலவச பட்டா கிடைக்காது.. அரசு முக்கிய அறிவிப்பு

TN அரசு ஏழை மக்களுக்கு இலவச பட்டா வழங்கி வந்தாலும், குறிப்பிட்ட இடங்களில் நீங்கள் வசித்தால் உங்களுக்கு பட்டா கிடைக்காது. குளம், குட்டை, ஏரி, கால்வாய் & சதுப்பு நிலங்கள் போன்ற நீர்நிலை ஆக்கிரமிப்பு நிலங்களுக்கு பட்டா கிடைக்காது. வனத்துறைக்கு சொந்தமான காடுகள், ரயில்வே நிலங்கள், ராணுவத்திற்கு சொந்தமான இடங்கள், கோயில் நிலங்களில் வசித்தாலும் பட்டா நிச்சயம் கிடைக்காது என அரசு தெரிவித்துள்ளது.
Similar News
News February 16, 2026
இபிஎஸ் வீட்டில் நயினார்.. இறுதியாகும் தொகுதி பங்கீடு

நயினார் நாகேந்திரன், எல்.முருகன் ஆகியோர் சென்னை பசுமை வழிச்சாலை இல்லத்தில் EPS-ஐ சந்தித்து 1 மணி நேரம் ஆலோசனை நடத்தியுள்ளனர். இதில், NDA கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை இறுதி செய்வது தொடர்பாக விவாதித்ததாக கூறப்படுகிறது. ஒரு வாரத்திற்குள் தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல் கசிந்துள்ளது. பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என நினைக்கிறீர்கள்?
News February 16, 2026
நாளை பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

CBSE 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நாளைமுதல் தொடங்குகிறது. இந்தாண்டு தேர்வுகள் சில புதிய மாற்றங்களுடன் தொடங்க உள்ளன. 10-ம் வகுப்பு மாணவர்கள் இந்தாண்டு முதல் 2 முறை பொதுத்தேர்வு எழுதலாம். 12-ம் வகுப்பு விடைத்தாள்கள் கணினி திரை வழியே (On-Screen Marking) திருத்தப்பட உள்ளன. இது மதிப்பெண் கூட்டலில் ஏற்படும் பிழைகளைக் குறைக்கவும், முடிவுகளை விரைவாக வெளியிடவும் உதவும்.
News February 16, 2026
இளையராஜாவுக்கு செக் வைத்த நீதிமன்றம்!

Saregama நிறுவனம் வசமுள்ள 134 பட பாடல்களை இளையராஜா பயன்படுத்த டெல்லி HC இடைக்கால தடை விதித்துள்ளது. 1976-2001 காலக்கட்டத்தில் இளையராஜா இசையமைத்த அப்பாடல்களின் நிரந்தர காப்புரிமையை படத்தயாரிப்பாளர்களிடம் இருந்து பெற்றுவிட்டதாக Saregama வழக்கு தொடுத்தது. இவ்வழக்கில், அப்பாடல்கள் தனக்கே சொந்தம் என டிஜிட்டல் தளங்களில் இளையராஜா பதிவேற்றியது சட்டவிரோதம் என்ற Saregama-வின் வாத்தையும் கோர்ட் ஏற்றது.


