News February 4, 2026
தேர்தல் ஆணையம் பாஜகவின் கிளை அமைப்பா? பண்ருட்டி MLA

‘இந்திய அரசியலமைப்பின் அடிப்படைத் தூணாக இருக்க வேண்டிய, மக்களின் வாக்குரிமையை பாதுகாக்க வேண்டிய தேர்தல் ஆணையம், இன்று பாஜக ஆட்சியின் அரசியல் ஆயுதமாக மாற்றப்பட்டிருப்பது, நாட்டின் ஜனநாயகத்துக்கே நேர்ந்துள்ள பேராபத்தாகும்’ என்றும் தேர்தல் ஆணையம், பாஜகவின் கிளை அமைப்பா? பாசிசத்தின் காலடியில், மக்கள் ஜனநாயகமா? என்று தவாக தலைவரும், பண்ருட்டி எம்எல்ஏவுமான வேல்முருகன் இன்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Similar News
News February 8, 2026
கடலூர்: அழுகிய நிலையில் சடமாக கிடந்த முதியவர்

கடலூர் புதுசுனாமி நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன்(65). இவர் செல்லங்குப்பம் அருகில் உள்ள குட்டையில் உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த கடலூர் முதுநகர் போலீசார் விரைந்து வந்து, குட்டையில் இருந்து கிடந்த ராமச்சந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News February 8, 2026
கடலூர்: இந்த நம்பர் ரொம்ப முக்கியம்!

கடலூர் மக்களே., அடிக்கடி வீட்டில் கரண்ட் மற்றும் வோல்டேஜ் பிரச்சனையா? இனி EB ஆபிஸை தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 9445850811 மற்றும் 9443111912 என்ற எண்களில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 9498794987 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள அதிகம் SHARE செய்து உதவுங்க!
News February 8, 2026
கடலூர்: மாணவியை கடத்திய 16 வயது சிறுவன் கைது

நெய்வேலி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயதான மாணவி 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் இருந்த மாணவி திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மாணவியை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து நெய்வேலி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவியை கடத்தி சென்ற வடலூர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவனை நேற்று கைது செய்தனர்.


