News February 4, 2026

விஜய்க்கு ஆதரவாக பேசிய பிரவீன் சக்கரவர்த்தி

image

தவெகவின் வளர்ச்சி ஊரறிந்த விஷயம் என பிரவீன் சக்கரவர்த்தி பேட்டியளித்துள்ளார். தவெகவுக்கு வீட்டுக்கு ஒரு ஓட்டு இருப்பதாக விஜய் சொன்னதை மேற்கோள்காட்டி பேசிய அவர், தற்போது மக்கள் விஜய்யை அங்கீகரித்துள்ளது தன்னுடைய ஆய்வுகளிலேயே தெரிவதாக கூறியுள்ளார். ஏற்கெனவே இவர் விஜய்யை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது ஆதரவாக பேசியுள்ளதால் திமுகவினர் டென்ஷனில் இருக்கின்றனர்.

Similar News

News February 19, 2026

சென்னை மெட்ரோ: புதிய பாதைகளுக்கு ஒப்புதல்

image

தமிழ்நாட்டின் இடைக்கால பட்ஜெட் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. இதில் பூந்தமல்லி முதல் ஸ்ரீபெரும்புதூர் வழியாக சுங்குவார்சத்திரம் வரையிலான மெட்ரோவுக்கு ஒப்புதல் அளித்து, மத்திய அரசின் நிதியுதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, சென்னை ஏர்போர்ட் – கிளாம்பாக்கம் வரையிலும், கோயம்பேடு முதல் பட்டாபிராம் வழியாக ஆவடி வரையிலான திட்டத்துக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

News February 19, 2026

நகைக் கடன் தள்ளுபடி முடிவு.. ஹேப்பி நியூஸ்

image

மகளிர் வங்கிக் கணக்கில் ₹5,000 டெபாசிட் செய்து TN அரசு இன்ப அதிர்ச்சி கொடுத்தது. இந்நிலையில், நகைக் கடன் தள்ளுபடி குறித்த தேர்தல் வாக்குறுதிக்காக மக்கள் காத்திருக்கின்றனர். அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக, கூட்டுறவு வங்கிகளில் நிலுவையிலுள்ள நகைக் கடன் விவரங்களை TN அரசு கேட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால், நகைக் கடன் தள்ளுபடி குறித்த வாக்குறுதி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News February 19, 2026

எப்போதும் இளமையாய் இருக்க இது போதும்..

image

வாழைத்தண்டு சாறு, சருமத்தை நீர்ச்சத்துடன் வைத்து, பளபளப்பான மற்றும் இளமையான தோற்றத்தைத் தருகிறது. இதில் உள்ள இயற்கை தாதுக்கள், சரும சுருக்கங்களைத் தடுத்து, கரும்புள்ளிகள் மற்றும் முகப்பருக்களைக் குறைத்து, முகத்தை பொலிவாக்குகின்றன. தினமும் வெறும் வயிற்றில் வாழைத்தண்டு சாறு குடிப்பது, உடல் நச்சுக்களை நீக்கி சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். SHARE.

error: Content is protected !!