News February 4, 2026

செங்கல்பட்டு: காற்றில் பறக்கவிட ஆட்சியர் உத்தரவு

image

செங்கல்பட்டு அண்ணா நகரில் உள்ள டாஸ்மார்க் மதுபான கடையை இடமாற்றம் செய்ய கலெக்டர் உத்தரவிட்டும் அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர். இப்பகுதியில் இரண்டு ரேஷன் கடைகள் உள்ள நிலையில் பெண்கள் அதிக அளவில் ரேஷன் கடைக்கு வருகின்றனர். இவர்களிடம் குடிமகன்கள் வரம்பு மீறி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கலெக்டர் சினேகா இந்த டாஸ்மார்க் கடையை இடமாற்றம் செய்யும்படி உத்தரவிட்டார். ஆனாலும் இடமாற்றம் செய்யவில்லை.

Similar News

News February 12, 2026

செங்கல்பட்டு: உயிரோடு மண்ணில் புதைந்த நபர்

image

செய்யூர், பனையடிபாக்கத்தைச் சேர்ந்தவர் ஜெகதீசன் (40) பிளம்பர். அதில், முகையூர் டோல்கேட் பகுதி அருகே, ‘பொக் லைன் இயந்திரம் மூலமாக தோண்டப்பட்ட பள்ளத்தில் குழாய் பதிக்கும் பணி நடக்கிறது. இவர், நேற்று முன்தினம் மாலை 5:00 மணியளவில், குழாய் பொருத்துவதற்காக, பள்ளத்தில் இறங்கியுள்ளார். அப்போது, மேலே இருந்த மண் சரிந்து, ஜெக தீசன் மீது விழுந்ததில் உயிரோடு புதைந்து பலியானார். போலீசார் விசாரிக்கின்றனர்.

News February 12, 2026

செங்கல்பட்டில் கொடூரத்தின் உச்சம்!

image

தாம்பரத்தை சேர்ந்தவர் 9 வயது சிறுமி. தாய் தந்தை இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சிறுமியை தன் பொறுப்பில் வளர்க்க தந்தை நீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்நிலையில் சிறுமி கடந்த ஆண்டு அவரது தந்தை பாலியல் தொந்தரவு அளித்ததாக நீதிமன்றத்தில் கூறியுள்ளார். இது தொடர்பாக கிளாம்பாக்கம் மகளிர் போலீசார் விசாரித்து சிறுமியின் தந்தையை நேற்று போக்சோவில் கைது செய்தனர்.

News February 12, 2026

செங்கல்பட்டு: நடுரோட்டில் துடிதுடித்து பலி!

image

காஞ்சிபுரம் மாவட்டம், காவனூர் பகுதியை சேர்ந்தவர் ராதா (34). இவர் நேற்று காவனூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் பொத்தேரி நோக்கி சென்று கொண்டிருந் தார். பொத்தேரி ரெயில் நிலையம் அருகே சிக்னலில் சாலை கடப்பதற்காக காத்திருந்த அவர் மீது செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த கன்டெய்னர் லாரி கட்டுப்பட்டை இழந்து அவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்தியிலே துடிதுடித்து உயிரிழந்தார்.

error: Content is protected !!