News February 4, 2026
சிக்கன் பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. விலை குறைந்தது

சண்டே வர வெயிட் பண்ண வேண்டாம், இன்னைக்கே சிக்கன் எடுத்துற வேண்டிதான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்குத்தான் இந்த ஹேப்பி நியூஸ். இன்று கறிக்கோழி விலை 1 கிலோ ₹120-லிருந்து ₹5 குறைந்து ₹115 ஆக விற்பனையாகிறது. அதேநேரம், முட்டைக்கோழி விலை ₹72 ஆகவே நீடித்து வருகிறது. முட்டை கொள்முதல் விலையும் ₹5.25 ஆக உள்ளதால், சிக்கன் பிரியர்கள் இன்று ஹேப்பியாக வாங்கி சாப்பிடுங்கள்.
Similar News
News February 17, 2026
இளம் நடிகை லீலா காலமானார்

சின்னத்திரை நடிகை ராஷ்மி லீலா(37) பெங்களூருவில் உள்ள ஹாஸ்பிடலில் காலமானார். நுரையீரல் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்ட அவர், கடந்த ஒரு மாதமாக ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். பாப்பா பண்டு, பந்தவ்யா உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து ரசிகர்களின் மனத்தை வென்ற அவருக்கு சினிமா வாய்ப்புகள் வந்த தருணத்தில் இத்துயரம் நடந்துள்ளது.
News February 17, 2026
PM ஆக பதவியேற்கும் தாரிக் ரஹ்மான்.. விழாவில் ஓம் பிர்லா!

வங்கதேசத்தின் புதிய பிரதமராக வங்கதேச தேசியவாதக் கட்சியின் (BNP) தலைவரும், Ex PM கலீதா ஜியாவின் வாரிசுமான தாரிக் ரஹ்மான் இன்று பதவியேற்க உள்ளார். தெற்கு பிளாசாவில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு விழாவில், இந்தியா தரப்பில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும் மக்களவையின் GS உத்பல் குமார் சிங் ஆகியோரும் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News February 17, 2026
திமுக MP-யிடம் வேதனைப்பட்ட செங்கோட்டையன்!

துரோகத்தின் மொத்த உருவம் EPS தான் என திமுக MP செல்வகணபதி விமர்சித்துள்ளார். சேலத்தில் பேசிய அவர், பார்லிமெண்ட் தேர்தலில், தான் ஜெயிக்க கூடாது என்பதற்காக எந்த செங்கோட்டையன் வீட்டு வாசலில் காத்திருந்தாரோ, அவரையே கட்சியில் இருந்து EPS நீக்கிவிட்டார் என பேசினார். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின் தன்னை தொடர்புகொண்ட KAS, ’மாப்ள என்னையும் குத்திட்டான்யா’ என்று வேதனை தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.


