News February 4, 2026
ராமநாதபுரம்: மீனவர்கள் 9 பேர் விடுதலை

கடந்த டிச.28ல் மண்டபம் மீனவர்கள் 3 பேர், ஜன.3ல் மயிலாடுதுறை மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. இதில், மண்டபம் மீனவர்கள் 2 பேரையும், மயிலாடுதுறை மீனவர்கள் 7 பேரையும் இலங்கை நீதிமன்றம் நேற்று (பிப்.3) விடுதலை செய்துள்ளது. 3 மீனவர்களுக்கு 6 மாத சிறை தண்டனையும் ரூ.40 லட்சம் அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Similar News
News February 10, 2026
ராமேஸ்வரம் கோவில் நடை அடைப்பு

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு கடந்த பிப் 6ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பிக்கப்பட்டது. திருவிழாவின் 3-ம் திருநாளான இன்று பிப்-10 ம் தேதி சுவாமி அம்பாள் கெந்தமாதனபர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஆதலால், காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை கோவில் நடை அடைக்கப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 9, 2026
இராமநாதபுரம்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (பிப்.09) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.