News February 4, 2026

H.ராஜா உடல்நிலை.. முக்கிய அப்டேட்

image

பக்கவாத பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வரும் H.ராஜாவை நேரில் சந்தித்த நயினார் நாகேந்திரன், அவரது உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார். நல்ல முறையில் H.ராஜாவின் உடல்நலன் முன்னேறிக் கொண்டிருப்பதாக தெரிவித்த நயினார், வெகுவிரைவில் அவர் வீடு திரும்புவார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், அவர் மக்கள் பணிக்கு திரும்புவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை எனவும் கூறியுள்ளார்.

Similar News

News February 6, 2026

வசூல் ராஜாவாக மாறிய விஜய்: பாஜக

image

தவெகவை வியாபார கழகமாக விஜய் மாற்றிவிட்டார் என பாஜக தெரிவித்துள்ளது. ரசிகர்களையும், தொண்டர்களையும் அடமானம் வைத்து தேர்தலில் திமுகவை வெற்றிபெற வைக்கும் வசூல் ராஜாவாக விஜய் இருப்பதாகவும் பாஜக சாடியுள்ளது. மேலும், திமுக – தேர்தல் வியாபாரியான ஆதவ் அர்ஜூனா போட்ட ஒப்பந்தப்படி விஜய் செயல்படுவதோடு, தலையாட்டி பொம்மை போல் நடப்பதாகவும் காட்டமாக விமர்சித்துள்ளது.

News February 6, 2026

அங்கன்வாடி பள்ளிகளுக்கு விடுமுறை.. அரசு அறிவிப்பு

image

அங்கன்வாடி பள்ளிகளுக்கு கோடை விடுமுறையை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி, மே 1 – 31 வரை ஒரு மாதம் விடுமுறை அளிக்கப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மே மாதத்தில் நிலவும் வெப்பநிலையை கருத்தில் கொண்டு விடுமுறை அளிக்கப்படுவதாகவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. So, குழந்தைகளே நீங்கள் ஜாலியாக விளையாடலாம், பெற்றோர்களே நீங்களும் டூர் செல்ல திட்டமிடலாம்.

News February 6, 2026

இன்று தை கடைசி வெள்ளி.. இதை மறக்காம பண்ணிடுங்க

image

எலுமிச்சை மாலை சாற்றுவதன் மூலம், அம்மனின் முழு அருள் கிடைக்கும் என நம்பப்படுகிறது. ஆடி மாதமும், தை மாதமும் அம்மனுக்கு விசேஷமான காலங்கள் என்பதால், தை கடைசி வெள்ளி கிழமையான இன்று அருகில் உள்ள அம்மன் கோயிலுக்கு சென்று தவறாமல் எலுமிச்சை பழ மாலை சாற்றி வழிபடுங்கள். குறிப்பாக, ராகு காலத்தில் துர்கையம்மனுக்கு எலுமிச்சை மாலை சாற்றி, எலுமிச்சை தீபம் ஏற்றினால் ராகு தோஷம் நீங்கும் என்பது ஆன்மிக மரபு.

error: Content is protected !!