News February 4, 2026

விஜய்யிடம் இன்ஜினே இல்லை: அண்ணாமலை

image

NDA கூட்டணியை பற்றி விமர்சிக்கும் விஜய்யால், முதலில் 234 தொகுதிகளில் வேட்பாளர்களை நியமிக்க முடியுமா என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். தங்களிடம் டபுள் இன்ஜின் இருப்பதாக குறிப்பிட்ட அண்ணாமலை, விஜய்யிடம் இதுவரை இன்ஜினே பார்க்க முடியவில்லை எனக் கூறினார். மேலும், தன்னிடம் வண்டி, இன்ஜின், சேஸ், ஊற்றுவதற்கு பெட்ரோல், டீசல் என எதுவுமே இல்லாமல் விஜய் பேசி வருவதாக அவர் விமர்சித்துள்ளார்.

Similar News

News February 8, 2026

40 வயதிற்கு மேல் ஆண்கள் இதை கட்டாயம் செய்யணும்!

image

40 வயதிற்கு மேல், ஆண்கள் நடைபயிற்சிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். தினமும் 45 நிமிடங்களாவது நடைபயிற்சி செய்ய வேண்டும். இது மன அழுத்தத்தை குறைக்க, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த ஈசியான வழி. எடை குறைப்பதற்கும் நடைபயிற்சி முக்கியமானதாகும். ரத்த ஓட்டம் சீராவதால், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்களை கட்டுப்படுத்த முடியும். இனி இதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்!

News February 8, 2026

நாளை இந்த நேரத்தில் டாஸ்மாக் கடைகள் இயங்காது!

image

பணி நிரந்தரம் உள்ளிட்ட பல முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் நாளை போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதனால், மதுக் கடைகள் நாளை 3 மணி நேரத்துக்கு இயங்காது என டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் போராட்டக் குழு அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் நாளை பகல் 12 மணி முதல் 3 மணி வரை டாஸ்மாக் கடைகள் இயங்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 8, 2026

டிரம்ப்பின் சதிக்கு மோடி பலியாகிவிட்டார்: திருமா

image

இந்தியா- அமெரிக்க வர்த்தக ஒப்பந்ததுக்கு திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். நாட்டு மக்களின் நலன்களை விட கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களே ஆட்சியாளர்களுக்கு முதன்மையாக இருப்பதாக திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், டிரம்ப்பின் சதி வேலைக்கு PM மோடி பலியாகிவிட்டதாக சாடிய அவர், இந்திய – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை மக்கள் எதிர்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!