News May 9, 2024
கேஸ் இணைப்பு பெற்றுள்ள வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் கேஸ் இணைப்பு பெற்றுள்ள அனைத்து வாடிக்கையாளர்களும் தங்களுடைய கேஸ் இணைப்பு ஆவணங்களை சரி பார்க்கும் பொருட்டு தாங்கள் இணைப்பு பெற்றுள்ள கேஸ் ஏஜென்சி நிறுவனத்திற்கு சென்று தங்களுடைய கைரேகையை பதிவு செய்து உறுதி செய்து கொள்ளுமாறு கேஸ் ஏஜென்சி நிறுவனங்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Similar News
News January 19, 2026
தி.மலை அருகே துடிதுடித்து பலி

செங்கம்–தி.மலை சாலையில் உள்ள சுண்டைக்காய் பாளையம் சந்திப்பு அருகே நடந்த விபத்தில், பதிவு எண் இல்லாத இருசக்கர வாகனத்தில் சென்ற மேல் கரியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ராஜவேல் (60) மீது பின்னால் வந்த கார் மோதியது. பலத்த காயமடைந்த அவர் செங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் துடிதுடித்து உயிரிழந்தார். இந்த விபத்தில் குமார் (48) காயமடைந்தார். விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
News January 19, 2026
அண்ணாமலையார் கோவிலில் நடிகர் ரவி மோகன் தரிசனம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் (ஜனவரி 18) நேற்று நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷா மற்றும் அவரது பெற்றோருடன் சாமி தரிசனம் செய்தனர். கோயில் நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு மரியாதை செய்து பிரசாதம் வழங்கப்பட்டது. கோவில் ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் அவர்களுடன் செல்பி செல்ஃபி மற்றும் புகைப்படம் எடுத்துக் கொண்டு மகிழ்ந்தனர்.