News May 9, 2024
489 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

சேலம் மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் 489 குழந்தை திருமணங்கள் தடுத்த நிறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தகவல் தெரிவித்தார். மேலும் குழந்தை திருமணம் தொடர்பான தகவல்களை
1098 அல்லது 151 என்ற கட்டணம் இல்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்தார்.
Similar News
News November 8, 2025
ஏற்காட்டில் 25 அடி பள்ளத்தில் பாய்ந்தக் கார்: ஒருவர் பலி!

ஏற்காட்டு கீரைக்காடு பகுதியில் எஸ்டேடில் பணிபுரியம் நவீன் (32), ஈஸ்வர் (23), பிரசாந்த் (32) ஆகிய மூவரும் நேற்று இரவு மது போதையில் காரில் பயணித்தாக கூறப்படுகிறது. சுமார் 12 மணி அளவில் காக்கம்பட்டி கொண்டை ஊசி வளைவில் கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை மீறி அருகில் இருந்த 25 அடி பள்ளத்தில் விழுந்துள்ளது. பிரசாந்த் உயிர் இழந்தார். மற்ற இருவரும் சேலம் ஜிஹெச்சில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
News November 8, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்!

சேலம் ஊரகம் எடப்பாடி, சங்ககிரி, மேட்டூர், ஓமலூர், ஆத்தூர், தலைவாசல், வீரபாண்டி, சேலம் நகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள காவல்துறையினரை இரவு நேரங்களில் குற்ற சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க தினந்தோறும் ரோந்து பணியில் அமர்த்துவது வழக்கம். அதன்படி இன்று (நவ. 08) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
News November 8, 2025
சேலம்: பிளஸ்-2 மாணவிக்கு இன்ஸ்டாவில் தொல்லை!

சேலம் சூரமங்கலம் அருகே காசக்காரனூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (37), இவர் பிளஸ்-2 மாணவி ஒருவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்ததை அடுத்து, சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


