News May 9, 2024
வேலூர்: மணல் கடத்திய லாரி பறிமுதல்

வேலூர் இடையன்சாத்து பகுதியில் பென்னாத்தூர் விஏஓ காசி நேற்று (மே 8) மணல் கடத்தலை தடுக்க வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கனரக லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் மணல் இருந்தது. அதற்கான ஆவணங்கள் இல்லை. இதையடுத்து 3 யூனிட் மணலுடன் லாரியை பறிமுதல் செய்து பாகாயம் போலீஸ் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் காசி ஒப்படைத்தார். டிரைவர் சீனிவாசன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News February 1, 2026
வேலூர் தாய்மார்களுக்கு ரூ.11,000! CLICK HERE

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) மூலம் கர்ப்பிணிகள் & பாலூட்டும் தாய்மார்களுக்கு மொத்தம் ரூ.11,000 உதவி வழங்கப்படுகிறது. முதல் குழந்தைக்கு ரூ.5,000 மற்றும் 2-வது பெண் குழந்தை என்றால் ரூ.6,000 இந்த திட்டம் மூலம் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க அருகிலுள்ள அரசு சுகாதார மையத்தை அணுகலாம். அல்லது<
News February 1, 2026
வேலூர் போலீசின் அதிரடி வேட்டை – 4 பேர் கைது!

பேரணாம்பட்டு பகுதியில் கள்ள சந்தையில் மது பாட்டில்கள் விற்கப்படுவதாக பேரணாம்பட்டு போலீசாருக்கு நேற்று (ஜனவரி.31) ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு (ரகுராம் 44) அருண்குமார் (33), கலைஞர் (56), கோவிந்தராஜ் (40), ஆகிய 4 பேரும் வீடுகளில் விற்பனைக்காக மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தனர். இதையடுத்து 4 பேரையும் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.
News February 1, 2026
வேலூரை உலுக்கிய கோர சம்பவம்!

குடியாத்தம் எர்த்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி பிரிவித்தா(20), 3ம் ஆண்டு தேர்வு முடிவில் இரண்டு பாடங்களில் தோல்வியடைந்ததால் மனமுடைந்த நிலையில் இருந்தார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். மகளை மீட்ட குடும்பத்தினர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும் பலனின்றி உயிரிழந்தார். பின், தாலுகா போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


