News February 4, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (பிப்.4) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
Similar News
News February 10, 2026
பாமகவின் குழப்பத்துக்கு திமுகவே காரணம்: அன்புமணி

ராமதாஸை சுற்றியுள்ள துரோகிகளில் முக்கியமானவர் ஜி.கே. மணி என ராயபுரத்தில் நடைபெற்ற இளைஞர் அணி கூட்டத்தில் அன்புமணி விமர்சித்துள்ளார். பாமகவில் நடக்கும் குழப்பங்களுக்கு திமுகதான் காரணம் எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். திரும்பிய திசையெல்லாம் திமுக ஆட்சிக்கு எதிராக போராட்டங்கள் நடப்பதாகவும், இளைஞர்கள் புரட்சி செய்தால் ஆட்சி மாற்றம் ஏற்படும் எனவும் அவர் கூட்டத்தில் பேசியுள்ளார்.
News February 10, 2026
இந்த நேரத்தில் செல்போன் யூஸ் பண்ணாதீங்க!

நார்மலாகவே போன் அதிகமாக ஹீட்டாகும். அது, சம்மரில் இன்னும் கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும். ஏன், போன் வெடிக்கும் அபாயமும் கூட ஏற்படலாம். அப்படி போன் அதிக ஹீட்டானால், நமக்கு ஒரு எச்சரிக்கை மெசெஜ் வரும். அது மாதிரியான நேரத்தில், என்ன வேலையாக இருந்தாலும், கொஞ்சம் நேரம் போனை யூஸ் பண்ணாதீங்க. போனை கொஞ்சம் நேரம் நிழலான இடத்தில் வைத்துவிட்டு, பிறகு யூஸ் பண்ணுங்க. SHARE IT.
News February 10, 2026
நெகடிவ்வாக இருப்பவர்களுக்கே வெற்றி கிடைக்குது: சரத்குமார்

நல்லவனாக இருந்தால் மட்டும் கதாநாயகனாக இருக்க முடியாது என சரத்குமார் பேசியுள்ளார். ஆழி படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், நெகடிவ்வாக இருப்பவர்கள்தான் வெற்றி பெறுகிறார்கள் என கூறியுள்ளார். மேலும், வில்லன் ஹீரோவாகவும், ஹீரோ வில்லனாகவும் இப்போது மாறிவிட்டனர் எனவும், நான் கலை உலகைத்தான் சொல்கிறேன், வேறு எதையும் புரிந்து கொள்ளாதீர்கள் என்றும் நகைச்சுவையாக பேசியுள்ளார்.


