News May 9, 2024
தமிழில் பெயர்ப் பலகை வைக்க வைரமுத்து கோரிக்கை

அண்மையில் நடந்த வணிகர் சங்க மாநாட்டில் கவிஞர் வைரமுத்து பங்கேற்றார். அதில், தமிழகத்தில் அனைத்து வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளும் தமிழில் விளங்க வேண்டும் என கோரிக்கை வைத்ததாகவும், அதற்கு வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா ஒப்புதல் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார். எந்தப் பெயரையும் தமிழ்ப்படுத்த குழு அமைப்போம் என்றும், இது நிறைவேறினால் தெருவெல்லாம் தமிழ் செழிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
Similar News
News August 21, 2025
பதவிப்பறிப்பு மசோதாவுக்கு சீமான் ஆதரவு

PM, CM தீவிர குற்ற வழக்குகளில் கைதாகி 30 நாள்களுக்கு மேல் சிறையில் இருந்தால், பதவியில் இருந்து நீக்கம் செய்யும் மசோதாவுக்கு சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார். மக்கள் பிரதிநிதிகள் தவறு செய்து தண்டனை பெற்றால், அவர்களது பதவி பறிக்கப்படுவது சரிதானே; அப்போதுதான் ஒழுங்கு இருக்கும், இதுபோன்ற நிறைய மாறுதல்கள் மற்றும் சீர்த்திருத்தங்கள் தேவை எனவும் கூறியுள்ளார்.
News August 21, 2025
மாநாடு: பெண்கள் பாத்ரூமை ஆண்கள் பயன்படுத்தும் நிலை

தவெக மாநாட்டுத் திடலில் பெண்கள் கழிப்பறையை ஆண்கள் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. போதிய கழிப்பறை வசதி இல்லாமல் இருப்பதே இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. இதனால் பெண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே குடிநீர் குழாயில் காற்று மட்டுமே வருவது, ஸ்நாக்ஸ் அனைவருக்கும் செல்லாமல் இருப்பது என சில குறைகள் கூறப்படுகின்றன. வெயிலும் கொளுத்துவதால் தொண்டர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
News August 21, 2025
பகல் 12 மணி வரை இன்று.. முக்கிய செய்திகள்

✪மதுரை <<17471454>>மாநாட்டில்<<>> பரபரப்பு.. அடுத்தடுத்து 50 பேர் மயக்கம்
✪புதிய <<17470378>>கட்சி <<>>தொடங்குபவரும் நம் தலைவரை தான் போற்றுகின்றனர்.. EPS
✪தாக்குதலை தொடர்ந்து <<17470879>>டெல்லி<<>> CM-க்கு Z பிரிவு பாதுகாப்பு
✪தங்கம் விலை சவரனுக்கு ₹400 உயர்வு
✪ரோஹித், <<17469460>>கோலி <<>>பெயர் இல்லாததது ஏன்.. ICC விளக்கம் ✪ ₹500 <<17471292>>கோடியை <<>>நெருங்கிய ‘கூலி’ வசூல்