News February 3, 2026

BREAKING: விஜய் நிகழ்ச்சி.. மன்னிப்பு கேட்டார்

image

தவெக 3-ம் ஆண்டு துவக்க விழாவில் விஜய் முன்னிலையில் ‘மருதமலை மாமணியே முருகையா’ என்ற பாடலை பாடகர் வேல்முருகன் பாடியது சர்ச்சையானது. இதனையடுத்து, முருக பக்தர்களின் மனம் புண்பட்டதாக கூறி போலீசில் புகாரளிக்கப்பட்டது. தற்போது, தனது செயலால் யாருடைய மனதாவது புண்பட்டிருந்தால் மன்னிப்பு கோருவதாகவும், தான் எதார்த்தமாகவே பாடியதாகவும் அதற்கும் விஜய்க்கும் சமந்தமில்லை எனவும் வேல்முருகன் விளக்கமளித்துள்ளார்.

Similar News

News February 27, 2026

திங்கள்கிழமை முதல் பொதுத்தேர்வுகள் தொடக்கம்

image

+2, +1(அரியர்), 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 2-ல் தொடங்கி ஏப்.6-ல் நிறைவடைகிறது. இந்நிலையில், அனைத்து பள்ளிகளுக்கும் முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வினாத்தாள்களில் தவறு இருந்தால் மாணவர்களிடம் கருத்துகளை பெற்று, dgequestionpaperqueries@gmail.com மெயில் மூலம் தெரிவிக்க HM-களுக்கு தேர்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது. அதனை பரிசீலித்து மார்க் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

News February 27, 2026

கர்ப்பிணிகளுக்கு ₹11,000 வழங்கும் அரசு திட்டம்

image

PM மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தில், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களின் ஆரோக்கியத்திற்காக முதல் குழந்தைக்கு ₹5,000 வழங்கப்படுகிறது. அதேபோல, 2-வது முறையாக பெண் குழந்தை பெறுபவர்களுக்கு ₹6,000 கிடைக்கும். இதில் பயன்பெற SC/ST வகுப்பை சேர்ந்தவராக இருக்க வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ₹8 லட்சத்திற்கு மிகாமல் இருக்கணும். 2 தவணைகளாக வழங்கப்படும் தொகைக்கு <>PMMVY<<>>-ல் விண்ணப்பியுங்கள். SHARE.

News February 27, 2026

தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டும் தவெக

image

தேர்தலையொட்டி, மார்ச் 1-ல் தவெகவின் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 234 தொகுதிகளிலும் நடைபெறும் இக்கூட்டத்தில், தேர்தல் பரப்புரை, வாக்குச்சாவடி முகவர்களின் பணி உள்ளிட்டவை பற்றி ஆலோசிக்கப்படவுள்ளது. இந்நிகழ்வில் தேர்தல் கண்காணிப்பாளர்கள், இணைக் கண்காணிப்பார்கள், அந்தந்த சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த பல்வேறு அணியினர் தவறாமல் பங்கேற்குமாறு புஸ்ஸி ஆனந்த் வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!