News February 3, 2026

பள்ளி மாணவன் பையில் கஞ்சா: அரசை சாடிய நயினார்

image

சென்னையில் அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவன் கஞ்சா எடுத்து சென்ற சம்பவத்தை சுட்டிக்காட்டி, அரசை நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார். பள்ளி மாணவர்கள் கைகளில் கஞ்சாவும், பைகளில் பட்டாக்கத்தியும் புழங்கும் நிலையில், ‘கல்வியில் சிறந்த TN’ என்று விழா எடுத்ததற்கு திமுக வெட்கித் தலைகுனிய வேண்டும் எனவும் சாடியுள்ளார். மேலும், திமுகவை அகற்றினால் மட்டுமே TN நிம்மதிப் பெருமூச்சு விடும் என்றார்.

Similar News

News February 18, 2026

அதிமுகவில் இணைப்பு.. விஜய்க்கு இபிஎஸ் அதிர்ச்சி

image

TVK-ல் 90% வேட்பாளர் பட்டியல் இறுதியானதாகவும், கடந்த வாரம் நடந்த மா.செ.,க்கள் கூட்டத்தில் சீட்டு பற்றிய <<19116237>>புஸ்ஸி ஆனந்தின் பேச்சால்<<>> 30-க்கும் மேற்பட்ட மா.செ.,க்கள் அதிருப்தியில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதில் கொங்கு, வடக்கு மண்டலத்தில் 10-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைய தூதுவிட்டுள்ளனராம். அவர்களிடம் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த EPS இசைவு கூறியுள்ள விவகாரம் விஜய் தரப்புக்கு ஷாக் கொடுத்துள்ளது.

News February 18, 2026

இந்திய மார்க்கெட்டில் இந்த போன் தான் ராஜா!

image

இந்திய ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் ஐபோன்தான் ஆதிக்கம் செலுத்துகிறது என நினைத்தால், அது தவறு. நடுத்தர வர்க்கத்தினர் அதிகம் வாழும் இந்தியாவில், பட்ஜெட் விலையில் கிடைக்கும் போன்கள் தான் மார்க்கெட்டின் ராஜாவாக உள்ளன. அப்படி இந்தியர்களை அதிகளவில் கவர்ந்த டாப் 8 இடத்தில் உள்ள போன்களின் லிஸ்டை கொடுத்துள்ளோம். போட்டோவை இடது பக்கமாக Swipe செய்து பார்க்கவும். எந்த போன் பெஸ்ட்ன்னு நீங்க நினைக்கிறீங்க?

News February 18, 2026

தேர்தல் நடக்கவுள்ள 3 மாநிலங்களில் காங்., கலகம்!

image

தமிழகம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியில் அடுத்தடுத்து சலசலப்புகள் ஏற்பட்டுள்ளன. இது, பாஜகவின் திட்டமிட்ட சதி என காங்., நிர்வாகிகள் கூறி வருகின்றனர். ஆனால், காங்., தலைமையிடம் மரியாதை இல்லாததே உள்கட்சி பிரச்னைக்கு காரணம் என பாஜக பதிலடி கொடுத்துள்ளது. அசாமில் EX காங்., <<19156317>>தலைவர் பூபேன் போரா<<>>, தமிழகத்தில் மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி விவகாரம் புயலைக் கிளப்பியுள்ளது.

error: Content is protected !!