News February 3, 2026

விரைவில் களமிறங்கும் CSK மகளிர் படை..!

image

மகளிர் அணியை வாங்குவதே தங்களது அடுத்த இலக்கு என CSK அணியின் CEO காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் 5 சாம்பியன் பட்டங்களுடன் வெற்றிகரமான அணியாக CSK உள்ளது. எனினும் WPL தொடரில் இன்னும் பங்கேற்காமல் விலகியே உள்ளது. இந்நிலையில் உடனடியாக இல்லாவிட்டாலும், வரும் ஆண்டுகளில் நிச்சயமாக மகளிர் அணி உருவாகும் என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது CSK ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Similar News

News February 11, 2026

நாளை ஸ்டிரைக்: தமிழக அரசு புதிய வார்னிங்!

image

தொழிலாளர் சட்டங்களை மத்திய அரசு திருத்தியதை கண்டித்து நாளை(பிப்.12) பல்வேறு தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளன. இதற்கு திமுகவின் தொமுச உள்ளிட்ட அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில், நாளை பணியைப் புறக்கணித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் கிடையாது என தமிழக அரசு சற்றுமுன் எச்சரிக்கை விடுத்துள்ளது.

News February 11, 2026

காதலுக்காக ₹2,500 கோடியை உதறிய பெண்!

image

Practical ஆக மாறிவிட்ட இன்றைய ஜெனரேஷனை ஏஞ்சலின் பிரான்சிஸின் கதை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். மலேசியாவில் கிட்டத்தட்ட ₹2,500 கோடிக்கு இளவரசியாக பிறந்தவர், எளிய பின்புலத்தை சேர்ந்த ஜெடியாவை காதலித்துள்ளார். சொத்தா? காதலா? என்ற கேள்வியை தந்தை ஏஞ்சலின் முன் வைக்க, காதலரை ஏஞ்சலின் கரம் பிடித்துள்ளார். 2008-ம் ஆண்டு ஜெடியாவை திருமணம் செய்த ஏஞ்சலின், இன்றும் காதலில் திளைத்து வாழ்ந்து வருகிறார்.

News February 11, 2026

பள்ளி மாணவர்கள் 120 பேர் மருத்துவமனையில் அனுமதி

image

தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு, உ.பி.,யில் பள்ளி மாணவர்களுக்கு Albendazole மாத்திரை கொடுக்கப்பட்டது. இதனால் சுமார் 120 மாணவர்களுக்கு தலைவலி, வாந்தி ஏற்பட, சிகிச்சைக்கு பிறகு அவர்கள் குணமடைந்ததாக தகவல் வெளிவந்துள்ளது. நாடு முழுவதும் மாணவர்களுக்கு இம்மாத்திரை அளிக்கப்படும் சூழலில், மாத்திரையால் பிரச்னை இல்லை எனவும் வேறு காரணத்தால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என டாக்டர்கள் விளக்கமளித்துள்ளனர்.

error: Content is protected !!