News February 3, 2026

தனிக்கட்சி தொடங்குகிறாரா சசிகலா?

image

வருகிற சட்டமன்றத்தேர்தலில் தனது தலைமையில் நிச்சயம் ஜெயலலிதா ஆட்சியை அமைப்போம் என சசிகலா தெரிவித்துள்ளார். மேலும், அது எப்படி நடக்கும் என்பதை நீங்களே விரைவில் தெரிந்து கொள்வீர்கள் என்றார். எதிரிகளையும், துரோகிகளையும் நிச்சயம் தோற்கடிப்போம் எனவும் அவர் கூறியுள்ளார். இதனால் சசிகலா தனிக்கட்சி தொடங்கி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Similar News

News February 8, 2026

டிரம்ப்பின் சதிக்கு மோடி பலியாகிவிட்டார்: திருமா

image

இந்தியா- அமெரிக்க வர்த்தக ஒப்பந்ததுக்கு திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். நாட்டு மக்களின் நலன்களை விட கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களே ஆட்சியாளர்களுக்கு முதன்மையாக இருப்பதாக திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், டிரம்ப்பின் சதி வேலைக்கு PM மோடி பலியாகிவிட்டதாக சாடிய அவர், இந்திய – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை மக்கள் எதிர்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

News February 8, 2026

நடிகை சம்யுக்தா ஹனிமூன் போட்டோஸ்

image

நடிகை சம்யுக்தா தனது கணவருடன் ஹனிமூன் சென்ற போட்டோஸை SM-ல் பகிர்ந்துள்ளார். CSK முன்னாள் வீரரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான அனிருதா ஸ்ரீகாந்த்தும் பிக்பாஸ் புகழ் நடிகை சம்யுக்தாவும் 2 மாதங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டனர். இது, இவர்கள் இருவருக்கும் 2-வது திருமணம். திருமணம் முடிந்த கையுடன் ஹனிமூன் சென்றுள்ளனர். ஹனிமூன் போட்டோஸை சம்யுக்தா தற்போது பதிவிட்டுள்ளார்.

News February 8, 2026

ஆபரேஷன் சிந்தூர்.. இன்னும் பாகிஸ்தான் மீளவில்லை

image

கடந்தாண்டு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மற்றும் விமானப்படை தளங்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் இந்தியா மிகப் பெரிய தாக்குதலை நடத்தியது. இத்தாக்குதல் நடந்து 10 மாதங்கள் கடந்த பிறகும் இதிலிருந்து பாகிஸ்தான் இன்னும் முழுமையாக மீளவில்லை. தாக்குதலுக்கு உள்ளான போலாரி விமானத் தளத்தில் பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுகுறித்த செயற்கைக்கோள் புகைப்படங்களை NDTV வெளியிட்டுள்ளது.

error: Content is protected !!