News February 3, 2026
விழுப்புரம்: காதல் திருமணம் செய்த பெண் சாவு!

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தேவ ஜெசிப்பிரியா(22), விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வசந்தராஜ்(22) ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், கடந்த ஜன.31ஆம் தேதி ஜெசிப் பிரியா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதைத் தொடர்ந்து, நேற்று(பிப்.2) காலை ஜெசிப்பிரியா குடும்பத்தினர், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, வசந்தராஜ் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க போராட்டம் நடத்தினர்.
Similar News
News February 10, 2026
விழுப்புரத்தில் பம்புசெட்டு அமைக்க 70% மானியம்!

விழுப்புரம் மக்களே, தமிழ்நாடு அரசு, ‘முதலமைச்சரின் சூரிய சக்தி பம்புசெட்டுகள் திட்டத்தின்’ கீழ் விவசாயிகளுக்கு 70% மானியத்தில் சோலார் பம்புசெட்டுகளை வழங்குகிறது. அத்துடன், 5 ஆண்டுகளுக்கு இலவச பராமரிப்பு, காப்பீட்டு வசதியும் செய்து தரப்படும். இதில் பயனடைய விரும்பும் நபர்கள், <
News February 10, 2026
இலவச தையல் இயந்திரம் வழங்கிய ஆட்சியர்

விழுப்புரம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், இன்று (பிப்.10) தையல் இயந்திரங்களை வழங்கினார். உடன் மாவட்ட சமூகநல அலுவலர் ராஜம்மாள் உட்பட பலர் உள்ளனர்.
News February 10, 2026
விழுப்புரத்தில் 8 கிராம் தங்கம் இலவசம்!

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.


