News February 3, 2026

ஸ்ரீவி: புலிகள் சரணாலய பகுதியில் காட்டுத்தீ – பரபரப்பு

image

வத்ராப் மேற்கு தொடர்ச்சி மலைபகுதியில் சாம்பல்நிற அணிகள் சரணாலயம், மேகமலை புலிகள் காப்பகம் உள்ளது. நேற்று இரவில் இங்குள்ள தூங்கன் கடவு பீட் வெள்ளைப்பாறை சரகத்திற்குட்பட்ட பகுதியில் திடீரென காட்டுத்தீ பற்றியது. இதையடுத்து காற்றின் வேகம் காரணமாக காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. வனச்சரகர் ரவீந்திரன் மேற்பார்வையில் 5 பேர் கொண்ட குழுவினர் வனப்பகுதிக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Similar News

News February 18, 2026

விருதுநகர் மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவிப்பு

image

விருதுநகர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் வரும் வெள்ளிக்கிழமை அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 20க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் மூலம் சுமார் 500-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளன. எனவே வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இது முகாமில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

News February 18, 2026

வட்டார ஒருங்கிணைப்பாளர் காலியிடங்கள் அறிவிப்பு

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாவட்டத்தில் உள்ள 11 வட்டாரங்களில் காலியாக உள்ள 23 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடம் பூர்த்தி செய்யப்பட உள்ளது. நேர்முகத் தேர்வின் அடிப்படையில் நிரப்பப்பட உள்ள இந்த பணியிடங்களுக்கு ஏதேனும் ஒரு பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தகுதியுடையோர் www.virudhunagar.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

News February 18, 2026

விருதுநகர் மாவட்ட விவசாயிகளின் கவனத்திற்கு

image

விருதுநகர் மாவட்டத்தில் பிப்ரவரி 2026 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 20ம் தேதி அன்று காலை 11 மணியளவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. எனவே, மாவட்டத்தில் உள்ள விவசாய பெருமக்கள் கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான பொதுவான கோரிக்கைகளை மட்டும் மனு மூலம் அளிக்குமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

error: Content is protected !!