News February 3, 2026
கூட்டணி விஷயத்தில் பேரமா? கொந்தளித்த பிரேமலதா

கூட்டணி குறித்து திடமான முடிவை எடுக்காமல் திமுக, அதிமுக ஆகிய கட்சிகளிடம் பிரேமலதா பேரம் பேசுவதாக ஊடகங்களில் கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில், பிற கட்சிகள் தங்களுக்கு தேவையான தொகுதிகளை கேட்டால் அது கூட்டணி பேச்சுவார்த்தையாம்; அதே உரிமையில் தேமுதிக கேட்டால் பேரம் என்று விமர்சிக்கப்படுவதாக பிரேமலதா தெரிவித்துள்ளார். இது எந்த வகையில் நியாயம், நீதி எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Similar News
News February 12, 2026
இந்திய எல்லையில் Glass பாட்டில்கள் வைப்பது ஏன்?

இந்திய எல்லையில் துப்பாக்கி, குண்டுகள் மட்டுமல்லாமல் ஒரு கண்ணாடி பாட்டிலும் நம்மை பாதுகாக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? எல்லைகளில் உள்ள காடுகள், மலைகளில் சிசிடிவி பொருத்துவது கஷ்டம். இதனால் அங்குள்ள முள்வேலிகளில் கண்ணாடி பாட்டில்கள் தொங்கவிடப்படுகின்றன. எதிரி நாட்டவர்கள் ஊடுருவ முயற்சி செய்தால் இந்த பாட்டில்கள் ஒன்றோடொன்று மோதி சத்தம் எழுப்பி நமது ராணுவத்தினரை அலர்ட் செய்யும். SHARE.
News February 12, 2026
கேரளாவிலும் திமுகவினர் கொள்ளை: அண்ணாமலை

கேரளாவில் 55 பவுன் நகையை கொள்ளையடித்த வழக்கில் திமுக நிர்வாகி ரமேஷ் என்பவர் கைதாகியுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். TN-ஐ கொள்ளையடிப்பது போதாதென்று திமுகவினர், அண்டை மாநிலத்திலும் கொள்ளையடிக்க தொடங்கியிருக்கிறார்கள் எனவும் சாடியுள்ளார். இன்னும் எத்தனை மாநிலங்களில், இந்த ரமேஷ் உள்ளிட்ட திமுகவினர், திராவிட மாடலை நிலைநாட்டியிருக்கிறார்கள் என்பது, விசாரணையில் தெரியவரும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
News February 12, 2026
வங்கிக் கணக்கில் ₹2,000.. அரசு புதிய அறிவிப்பு

PM கிசான் திட்டத்தின் கீழ் 22-வது தவணைத்தொகை ₹2,000 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவுள்ளது. இந்நிலையில், பயனாளிகளில் பலர் விவசாய தனித்துவ எண்ணை பெறாமல் உள்ளனர். எனவே, அவரவர் வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்களுக்கு சென்று நில ஆவணங்கள், சிட்டா, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணை வழங்கி தனித்துவ அடையாள எண்ணை பெறுமாறு அரசு அறிவித்துள்ளது.


